For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : PM Modi will meet china General Secretary Xi Jinping in Tamilnadu

    டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளது ஏன் என்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

    டோக்லாம் பிரச்சினைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அந்நாட்டின் வுகான் நாட்டில் சந்தித்துக் கொண்டனர்.

    அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நாளை ரஷ்யா செல்லும் மோடி.. ஆனால் உலகத்தின் பார்வை சென்னை மீது.. பின்னணி இதுதான்!நாளை ரஷ்யா செல்லும் மோடி.. ஆனால் உலகத்தின் பார்வை சென்னை மீது.. பின்னணி இதுதான்!

    தகவல்கள்

    தகவல்கள்

    அவ்வாறு இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து மோடி பேசுவார் என தெரிகிறது. அக்டோபர் 11 முதல் 13 வரை இந்த சந்திப்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சீன அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    வாரணாசி

    வாரணாசி

    எத்தனையோ இடங்கள் இருக்க மாமல்லபுரத்தை சந்திப்பு இடமாக மத்திய அரசு தேர்வு செய்தது எப்படி என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மோடி- ஜின்பிங் சந்திப்பை வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு இடத்தில் வைக்கலாம் என முடிவெடுத்து மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தேர்வு செய்யப்பட்டது.

    மாமல்லபுரத்தில் சந்திப்பு

    மாமல்லபுரத்தில் சந்திப்பு

    இதைத் தொடர்ந்து வாரணாசியில் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கடந்த முறை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள குஜராத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். அது போல் இந்த முறை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என யோசனைகள் முன் வைக்கப்பட்டது.

    ரசிப்பு

    ரசிப்பு

    மாமல்லபுரம் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆட்சி செய்தனர். இங்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. புத்தமத பிட்குவான போதி தர்மர் பிறந்த இடம் காஞ்சிபுரம் என சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மாமல்லபுரத்தில் சிற்பங்களை பார்வையிட்டபடியும், கடற்கரை கோயிலை ரசித்தப்படியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் அந்நாட்டு அதிபர் சந்திப்பு கூட்டத்தை நடத்துவது உலக நாடுகளிடையே உற்று நோக்கப்படுகிறது.

    English summary
    India and China may meet in Mamallapuram, Chennai for their informal meeting by October. Here the reasons for Why Mamallapuram is selected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X