For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின உரையில் நீலகிரி நீலக்குறிஞ்சி மலரை குறிப்பிட்ட மோடி.. ஏன் தெரியுமா?

இந்திய சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, குறிஞ்சி மலர் குறித்து தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டது விவாத பொருளாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குறிஞ்சி மலர் பற்றி பேசிய பிரதமர் மோடி- வீடியோ

    சென்னை: இந்திய சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, குறிஞ்சி மலர் குறித்து தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டது விவாத பொருளாகி உள்ளது.

    இந்தியாவில் தற்போது 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியா முழுக்க சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    இதில் இன்று பிரதமர் மோடி டெல்லியில் பேசியது வைரலாகி உள்ளது. முக்கியமாக அவர் பேச்சின் போது குறிப்பிட்ட சில வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள் வைரலாகி உள்ளது.

    குறிஞ்சி மலரை குறிப்பிட்டார்

    குறிஞ்சி மலரை குறிப்பிட்டார்

    பிரதமர் மோடி, தனது உரையின் போது குறிஞ்சி மலரை குறிப்பிட்டார். நீலக்குறிஞ்சி மலர் 12 வருடத்திற்கு பின் இப்போதுதான் பூத்து இருக்கிறது என்று கூறினார். முக்கியமாக, நீலகிரியில் பூக்கும் நீலக்குறிஞ்சி மலரை அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். நீலகிரியில் குறிஞ்சி மலர் நீல நிறத்தில் பூத்து குலுங்குகிறது என்றார்.

    விவாதம்

    விவாதம்

    மோடி இப்படி குறிப்பிட்டது ஏன் என்று இணையம் முழுக்க விவாதம் எழுந்துள்ளது. சுதந்திர தின உரையின் போது, சம்பந்தம் இல்லாமல் தன்னுடைய பேச்சில் பிரதமர் மோடி நீலக்குறிஞ்சி மலரை கூறியது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.

    ஏன் குறிப்பிட்டார்

    ஏன் குறிப்பிட்டார்

    பிரதமர் மோடி நீலக்குறிஞ்சி மலரை குறிப்பிட்டுவிட்டு, உடனே இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பேசினார். இந்தியாவில் தூங்கிக்கொண்டு இருந்த பொருளாதார யானை வேகமாக எழுந்து ஓட தொடங்கிவிட்டது. இனி எல்லாமே வளர்ச்சிதான் என்று குறிப்பிட்டார். அவர் குறிஞ்சி மலரை குறிப்பிட்டது இதற்காகத்தான் என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எத்தனையாவது முறை

    எத்தனையாவது முறை

    உலகம் எங்கும் குறிஞ்சி மலர், 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். கொடைக்கானல், மூணார், இடுக்கி ஆகிய பகுதியில் அதிகம் பூக்கும் இந்த நீல குறிஞ்சி மலர் உலகம் முழுக்க பிரபலம். தற்போது மீண்டும் இந்த மலர் பூத்து உள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆறாவது முறையாக இந்த மலர் பூக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As Narendra Modi began his Independence Day address from the ramparts of Red Fort, the Prime Minister made a reference to Neelakurinji flower in the Neelagiris which bloom once every 12 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X