For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.யின் மகர் நகரில் தேர்தல் பிரசாரத்தை மோடி ஏன் தொடங்கினார் தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தின் மகர் நகரில் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கியதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    உ.பி.யின் மகர் நகரில் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது ஏன்?- வீடியோ

    கபீர் நகர்: உத்தரப்பிரதேசத்தில் துறவி கபீர் நினைவிடம் உள்ள மகர் நகரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருப்பதன் பின்னனி குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2014 லோக்சபா தேர்தலின் போது இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் அத்தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

    Why Modi sounded the 2019 poll bugle from Maghar, the ‘Gateway to Hell’

    அண்மைகாலமாக துறவி கபீர் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் கபீர் மீது தலித்துகளும் இஸ்லாமியர்களும் பெரும் மதிப்பு வைத்துள்ளனர்.

    கபீர் நகரில் மரணமடைந்தால் நரகத்துக்குத்தான் செல்வர் என்கின்ற மூடநம்பிக்கை இருந்தது. இதனைத் தகர்க்கும் வகையில் கபீர் மகர் நகருக்கு வந்து தங்கி வாழ்நாளை நிறைவு செய்தார்.

    தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக பாஜகவை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்துகின்றன. இந்த நிலையில்தான் மகரில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். அதனால் கபீர் நகர் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி வரும் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற கருத்து நிலவுகிறது.

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கபீர் நகர் தொகுதியில் பாஜக 34.47% வாக்குகளைப் பெற்றிருந்தது. அத்துடன் மகரில் இருந்து 30 கி.மீ தொலைவில்தான் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வெற்றி பெற்ற கோரக்பூர் லோக்சபா தொகுதி இருக்கிறது. அண்மையில் கோரக்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Prime Minister Narendra Modi sounded the poll bugle for 2019 from Maghar, in Uttar Pradesh which is often referred to as the Gateway to Hell. In 2014, the PM had made holy city of Varanasi the epi-centre of the BJP's campaign and he even won the seat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X