For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுக்கு 'டபுள் கொட்டு'தான்.. ராகுலிடம் தைரியமாகச் சொன்ன 3 பேர்..!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஒரு மூன்று பேருக்கு உடனே போன் போட்டு அவர்களுக்கு நன்றி சொன்னாராம் ராகுல் காந்தி.

எதற்காக இந்த நன்றி தெரியுமா.. உங்களது கட்சிக்கு இந்த முறை வெறும் இரட்டை இலக்கத்தில்தான் சீட் கிடைக்கும் என்று சொன்னதற்காக.

இப்படி ராகுலிடம் திட்டவட்டமாக, தைரியமாக சொன்ன அந்த மூன்று பேரும் மத்திய அரசின் ரகசியப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாம்.

வரலாறு காணாத தோல்வி

வரலாறு காணாத தோல்வி

இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத அடியை கொடுத்துள்ளனர் மக்கள்.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அவலம்

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அவலம்

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட லோக்சபாவில் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அப்படி ஒரு அடியைக் கொடுத்துவிட்டனர் மக்கள்.

அன்றே சொன்ன அதிகாரிகள்

அன்றே சொன்ன அதிகாரிகள்

தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியிடம், ரகசிய புலனாய்வு மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள், ராகுலுக்காக நாடு முழுவதும் வாக்காளர்களின் மன நிலையை மோப்பம் பிடித்துச் சொல்லியுள்ளனர்.

இரட்டை இலக்கம்தான்

இரட்டை இலக்கம்தான்

அவர்கள் ராகுலிடம், உங்களது கட்சி பெரும் தோல்வியைத் தழுவும், இரட்டை இலக்கத்தில்தான் சீட் கிடைக்கும் என்று தெளிவாகச் சொல்லி விட்டார்களாம். இதனால் ராகுல் அப்போதே கிலியடைந்து விட்டாராம். இருப்பினும் நம்பிக்கையுடன் இருந்து வந்தாராம்.

சொன்னபடி நடந்தது

சொன்னபடி நடந்தது

ஆனால் அந்த அதிகாரிகள் சொன்னபடி நடந்ததால் ஆச்சரியப்பட்டுப் போன ராகுல் காந்தி, வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர்களுக்குப் போன் போட்டாராம். உண்மையைச் சொன்ன உங்களுக்கு நன்றி. வரும் ஆட்சியாளர்களிடமும் இதேபோல நேரமையாக செயல்படுங்கள் என்று அவர்களை மனதாரப் பாராட்டினாராம்.

நேர்மையானவர்தான் ராகுல்...

English summary
Rahul Gandhi thanked 3 intelligence officers for their correct forecasting of Congress's fate well before the election results came.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X