For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2-வது முறையாக வென்ற பிரதமர் மோடியை வாழ்த்திய ரஜினி.. ஹாட் டிரிக் அடித்த கெஜ்ரிவாலை மறந்தது ஏனோ?!

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2-ஆவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்த போது வாழ்த்துகளை சொன்ன ரஜினிகாந்த், டெல்லியில் இரு தேசிய கட்சிகளை புறந்தள்ளிவிட்டு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த வேண்டும் என்றும் அங்கு ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்றும் பாஜக கடுமையாக பிரசாரம் செய்தது. ஷாகீனபாக் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால் பிரியாணி வாங்கித் தருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    அது போல் அந்த போராட்டக் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று கூறிய பாஜக அக்கட்சியே தீவிரவாத இயக்கம் என கடுமையாக விமர்சனம் செய்தது.

    வெறித்தனம்.. பாஜக தோல்வியை.. பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிய எதிர்ப்பாளர்கள்.. செம சேல்ஸாம்! வெறித்தனம்.. பாஜக தோல்வியை.. பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிய எதிர்ப்பாளர்கள்.. செம சேல்ஸாம்!

    வளர்ச்சித் திட்டங்கள்

    வளர்ச்சித் திட்டங்கள்

    இந்த நிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளை பற்றியும் கவலைப்படாத கெஜ்ரிவால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்தார். இதற்கு அவர் செய்த வளர்ச்சித் திட்டங்கள் மீதான நம்பிக்கையே ஆகும். அதன் நம்பிக்கை பொய்யாகவில்லை என்பதை நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் கண்கூடாக காட்டிவிட்டன.

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி 3ஆவது முறையாக டெல்லி அரியணையில் பதவியேற்கவுள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல. பாஜகவை இரட்டை இலக்க வெற்றியை கூட தொட முடியாதபடி ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் வியக்க வைத்துள்ளது. அது போல் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை மாநில கட்சியான ஆம் ஆத்மி இரண்டாவது முறையாக டக் அவுட்டாக்கியுள்ளது.

    பாஜக

    பாஜக

    இந்த தேர்தல் உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால் இதன் முடிவுகள் பெரிதும் பேசப்படுகிறது. இந்த வெற்றியால் டெல்லி சூறாவளி தாக்குதலே நடந்துவிட்டது என சொல்லும் அளவுக்கு மக்கள் ஆம் ஆத்மிக்கு அள்ளிக் கொடுத்துவிட்டனர். இதனால் இரு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை நிலைகுலையச் செய்துள்ளது.

    தொலைபேசி

    தொலைபேசி

    இந்த ஹாட் டிரிக் வெற்றியை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இவ்வளவு ஏன் பிரதமர் மோடியே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கெஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    கெஜ்ரிவால்

    கெஜ்ரிவால்

    ஆனால் அரசியல் கட்சியை தொடங்காவிட்டாலும் ரஜினி காந்த் இதுவரை கெஜ்ரிவாலுக்கு எந்த வாழ்த்தையும் சொல்லாதது பெரும் பேசு பொருளாக உள்ளது. ஊழலற்ற நல்லாட்சி, மக்கள் நல ஆட்சி ஆகியவற்றை முன்னெடுத்து அரசியல் செய்ய ரஜினி கட்சி தொடங்கவுள்ள நிலையில் அதை கெஜ்ரிவால் செயல்படுத்திக் காட்டிவிட்டார்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    சிவாஜி திரைப்படத்தில் ஊழலை எதிர்த்து போராடும் பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். அது போல் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை குறித்தும் பேசியிருப்பார். இதை கெஜ்ரிவால் நிஜத்தில் செய்து காட்டிவிட்டார். டெல்லியில் ஊழலற்ற ஆட்சியை நடத்தினார், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியுள்ளார், மக்களே பாராட்டும் இலவச மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து கூறிய ரஜினி காந்த், சிவாஜி திரைப்படத்தில் விரும்பிய அத்தனையையும் செய்து முடித்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்திருப்பார். ஆனால் அவர் இதுவரை வாய் திறக்கவில்லை.

    English summary
    Why Rajinikanth is silent over AAP's Victory in Delhi assembly election results? as he reacted for Modi's second term.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X