For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா சிறை துறைக்கு வந்தது எப்படி தெரியுமா?

சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா சிறைத் துறைக்கு மாற்றப்பட்டதற்கான அரசியல் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு : டிஐஜி ரூபா சிறைத் துறைக்கு மாற்றப்பட்ட அரசியல் பின்னணி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஐஜி ரூபா பெங்களூரு போக்குவரத்து துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் ரூபா எப்படி சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார் என்ற அரசியல் பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எங்கிருந்தார் ரூபா

எங்கிருந்தார் ரூபா

சிறைத்துறைக்கு வருவதற்கு முன் ரூபா குற்றப் பிரிவில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அவரை யார் சிறைத்துறைக்கு மாற்றியது என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் விசாரிக்க சொன்னார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.

டீம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

டீம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

முதல்வரின் ஆணைப்படி விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் டீம் நேற்று சித்தராமையாவிடம் திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளது. டீம் கொடுத்த தகவலின்படி, ரூபா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மத்திய அமைச்சர் ஒருவராம்.

பாஜக அமைச்சரின் திட்டம்

பாஜக அமைச்சரின் திட்டம்

ரூபாவிற்கும் மத்திய அமைச்சரின் குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமாம். காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மத்திய அமைச்சருடன் போவது ரூபாவின் வழக்கமாம். அந்த மத்திய அமைச்சர் தான் ரூபாவிற்கு சசிகலா அசைன்மெண்ட்டை கொடுத்துள்ளார் என்ற திடுக் தகவலைக் கேட்டு சித்தராமையா ஆடிப் போயுள்ளார்.

அமைச்சரின் மிரட்டல்

அமைச்சரின் மிரட்டல்

மேலும், ரூபா சிறைத் துறைக்கு மாற்ற, முதல்வருக்கு தெரியாமல் பல கட்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மத்தியில் நடந்திருக்கிறது. பாஜகவின் இந்தத் திட்டத்திற்கு பல அதிகாரிகள் ஒத்துவரவில்லையாம். பாஜக அமைச்சரின் திட்டத்திற்கு ஒத்துவராத அதிகாரிகள் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார்கள்.

வழிக்கு வந்த அதிகாரிகள்

வழிக்கு வந்த அதிகாரிகள்

இதற்கு பயந்து போன அதிகாரிகள், ரூபாவை சிறைத் துறைக்கு மாற்றியுள்ளனர். மேலும், உள்துறை முழுவதும் இந்த அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, வேண்டிய நபர்களை பல்வேறு இடங்களில் நியமித்துள்ளனர்.

சித்தராமையா அதிர்ச்சி

சித்தராமையா அதிர்ச்சி

அதிகாரிகள் கொடுத்த தகவல்களை கேட்ட சித்தராமையாவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த திட்டமிட்டு பாஜக அமைச்சரும், ரூபா உள்ளிட்ட அதிகாரிகளும் செயல்பட்டு வருவதால் கவலை ஆழ்ந்துள்ளாராம் கர்நாடக முதல்வர்.

English summary
Why Roopa transferred to Prison department? A shock report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X