For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: டேபிள் டாப் விமான ஓடுபாதைகள் எப்போதுமே ஆபத்தானவை.. சவாலானவை. கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையும் அப்படியான ஒன்றுதான்.

Recommended Video

    Kerala விமான விபத்து நடந்தது எப்படி? பரப்பு பின்னணி

    நாம் இத்துடன் இணைத்துள்ள, கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையின் சாட்டிலைட் புகைப்படத்தை பாருங்கள். பார்க்கும் உங்களுக்கே பகீரென்று இருக்கிறதா..? ஆனால் இங்குதான் விமானங்கள் தரையிறங்க வேண்டும்.

    அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில், ஓடு பாதை வழுக்கும் தன்மையோடு இருக்கும்போது, இதில் விமானத்தை தரையிறக்கி, அதை நிறுத்துவது எவ்வளவு சிரமமா இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

    கோழிக்கோடு டேபிள் டாப் ஏர்போர்ட் மோசம்.. இது விபத்தல்ல, கொலை.. கொதிக்கும் விமான பாதுகாப்பு நிபுணர்கோழிக்கோடு டேபிள் டாப் ஏர்போர்ட் மோசம்.. இது விபத்தல்ல, கொலை.. கொதிக்கும் விமான பாதுகாப்பு நிபுணர்

    டேபிள் டாப்

    டேபிள் டாப்

    பக்கவாட்டு பகுதி அனைத்தும், பெரிய பள்ளம். சுமார் 200 அடி ஆழம் இருக்குமாம். மேலே ஒரு ஓடு பாதை. இப்படித்தான் இருக்கிறது கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடு பாதை பகுதி. எனவேதான், இதை டேபிள் டாப் ஓடுபாதை என்று அழைக்கிறார்கள். டேபிள் மாதிரியே ஒரு தோற்றம் இருப்பதால்தான் அந்த பெயர்.

    ஓடு பாதை

    ஓடு பாதை

    அனைத்து விமான நிலையங்களிலும் ஓடு பாதை முடிந்ததும், சற்று தூரம் புல்வெளி போன்ற பரப்பு இருக்கும். ஒருவேளை, விமானம் வழுக்கிக் கொண்டு ஓடினாலும், அங்கே கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால், இந்த ஓடு பாதையை பார்த்தாலே தெரிகிறது, வழுக்கினால், அதற்கு மேல் வாய்ப்பே கிடையாது என்பது.

    விபத்து

    விபத்து

    நேற்றும் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம், இப்படித்தான், வழுக்கிச் சென்று, கீழே விழுந்து விமானம் உடைந்துள்ளது. இதில் 19 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

    கோழிக்கோடு

    கோழிக்கோடு

    டேபிள் டாப் வகை விமான ஓடுதளங்கள் பாதுகாப்பில்லாதவை. ஆனால் கோழிக்கோடு விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் பெரிய அளவுக்கான விமானங்களை கையாள வேண்டியுள்ளது. பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும், தங்களது பெரிய வகை விமானங்களான, போயிங் 777, ஏர்பஸ் a330 போன்ற விமானங்களை கோழிக்கோடு இயக்குவதை எப்போதோ நிறுத்திவிட்டன என்பதும் நினைவு கூரத்தக்கதாக உள்ளது. எனவே கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    English summary
    The crash at Kozhikode brought back bitter memories of the flight accident in Mangaluru in 2010. The similarity between the two crashes are that both the airports have tabletop runways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X