For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

IND vs SA: தொடரையே வென்றுவிட்டாலும்! இந்தியாவிற்கு இன்றைய டி 20 மேட்ச் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

இந்தூர்: தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் மூன்றாவது டி 20 ஆட்டம் மிக முக்கியமானது ஆகும்.

இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான டி 20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இரண்டு அணிகளும் மூன்றாவது டி 20 போட்டியில் ஆட உள்ளன.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில் 108 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர

 வெற்றி

வெற்றி

அதன்பின் இறங்கிய இந்திய அணி சூர்யா குமார் அதிரடியால் சிறப்பாக ஆடியது. 2 விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் இந்திய அணி வென்றது. இதையடுத்து நேற்று முதல் நாள் கவுகாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நடைபெற்றது. முதல் டி 20 போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது டி 20 போட்டியில் அதே அணியுடன் களமிறங்கியது. இந்த நிலையில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவருக்கு 237-3 ரன்கள் எடுத்தது. இதில் சூர்யா குமார் யாதவ், ராகுல் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

கோலி, ரோஹித் 40+ ரன்களை எடுத்தனர். அதன்பின் ஆடிய தென்னாபிரிக்க அணியும் அதிரடியாகவே ஆடியது. மில்லர் சதம் காரணமாக 221-3 ரன்கள் வரை எடுத்து கடைசியில் போராடிதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று கடைசி டி 20 போட்டி நடக்கிறது. இந்த போட்டி இன்று முக்கியத்துவம் பெற காரணம், இதுதான் இந்தியா ஆடும் கடைசி டி 20 போட்டி. ஆம் அக்டோபர் மாதம் நடக்க உள்ள உலகக் கோப்பை டி 20 தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி 20 போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி மேட்ச்

கடைசி மேட்ச்


இதன் மேல் இந்திய அணியில் சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடியாது. அணியின் காம்பினேஷனில் சோதனைகளை செய்ய முடியாது. பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்து எந்த இடத்தில் யார் ஆடுவார்கள் என்பதை சோதித்து பார்க்க முடியாது. இதுவரை இந்திய அணியில் ஆடிய வீரர்களை வைத்துதான் முடிவுகளை எடுக்க முடியும். இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

பும்ரா

பும்ரா

இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை. ஜடேஜாவும் காயம் காரணமாக இடம்பெறவில்லை. தற்போது வரை பும்ராவிற்கு உறுதியான மாற்று அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் சிராஜ் இந்திய அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்றைய போட்டியில் கடைசி சோதனை முயற்சிகளை இந்தியா செய்துவிட வேண்டும். அதாவது புதிதாக வீரர்களை சோதனை செய்ய வேண்டும் என்றால் இன்றே சோதனை செய்து பார்த்துவிட வேண்டும்.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

சிராஜ் போன்றவர்களை களமிறக்கி பவுலிங் ஆர்டர் குறித்து சோதனை செய்யலாம். இந்திய அணியில் பவுலிங் சரியில்லை. பும்ரா இல்லாத காரணத்தால் கடைசி 5 ஓவர்களில் டிபன்ட் செய்வது கடினம் ஆகிவிடுகிறது. உதாரணமாக ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் பும்ரா இல்லை. இதனால் டிபன்ட் செய்ய வேண்டிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி கடுமையாக திணறியது. இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தோல்வி அடையவே இந்த டெத் ஓவர் சொதப்பல்தான் காரணமாக இருந்தது. கடந்த தென்னாபிரிக்க போட்டியிலும் இதேதான் நடந்தது.

சிராஜ்

சிராஜ்

இதனால் இன்று சிராஜ் போன்றவர்களை களமிறக்கி பவுலிங் ஆர்டர் குறித்து சோதனை செய்யலாம். பொதுவாக இந்திய அணி உலகக் கோப்பைக்கு சென்று கூட சோதனை முயற்சிகளை செய்யும். அது போல சோதனை முயற்சிகளை செய்யாமல் இன்றே அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும். பிளேயிங் 11 உறுதியான பிறகு, இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சிகளை தொடங்க வசதியாக இருக்கும். வீரர்களுக்கும் தங்களுக்கான ரோல் என்னவென்று தெரியும்.

English summary
Why the final India vs South Africa T 20 match today is very important for Men In Blue?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X