For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்களை இணைப்பது ஏன்? யாருக்கு வேட்டு வைக்கிறது காங்.?

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் உறுதியாக இருக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் தெலுங்கானா விவகாரத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியெல்லாம் பயனடைய முடியுமோ அத்தனை வழிகளும் கையாளப்படுகிறது என்பதையே 'ராயல தெலுங்கானா' முயற்சி வெளிப்படுத்துகிறது.

தெலுங்கானா என்பது ஆந்திராவின் 23 மாவட்டங்களில் 10 மாவட்டங்களை கொண்ட பகுதி. அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர், மேடக், நிஜாமாபாத், ஹைதராபாத், ரங்காரெட்டி ஆகிய 10 மாவட்டங்களைக் கொண்டதுதான் தெலுங்கானா.

எஞ்சிய ராயலசீமாவில் கர்னூல், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய 4 மாவட்டங்களும் கடலோர ஆந்திராவில் நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய 9 மாவட்டங்களும் அடங்கும்

தெலுங்கானாவில் யார் செல்வாக்கு?

தெலுங்கானாவில் யார் செல்வாக்கு?

தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியிருப்பதால் இங்கு காங்கிரஸ் கட்சியின் கைதான் ஓங்கியிருக்கிறது. அத்துடன் 2வது இடத்தில் இந்த கோரிக்கைக்காக தொடர்ந்து போராடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் செல்வாக்குடன் இருக்கிறது. இதேபோல் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்பகுதியில் ஆதரவு உள்ளது.

ராயலசீமாவில்..

ராயலசீமாவில்..

4 மாவட்டங்களைக் கொண்ட ராயலசீமாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு ஆகியோர் செல்வாக்கு அதிகம். இங்கு காங்கிரஸ் பின் தங்கியே இருக்கிறது. இருப்பினும் கர்னூல், அனந்தபுரம் மாவட்டங்களில் மஸ்லிஜ் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.

கடலோர ஆந்திராவில்..

கடலோர ஆந்திராவில்..

தெலுங்கனா பிரிவினையைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திராவில் காங்கிரஸ் அடியோடு காணாமல் போய்விட்டது. இப்போது தெலுங்கானாவை எதிர்க்கும் முதல்வர் கிரண்குமார் ரெட்டிதான் காங்கிரஸ் முகமாக இருக்கிறார். அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்வாக்கு செலுத்தி வருகிறார். இவர்களைப் போல தெலுங்குதேசம் கணிசமான ஆதரவு தளத்தை வைத்திருக்கிறது.

ராயல தெலுங்கானா என்பது என்ன?

ராயல தெலுங்கானா என்பது என்ன?

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபங்களுக்காகவே ராயல தெலுங்கானாவை உருவாக்க முயற்சிப்பதாகவும் இதன் மூலம் தெலுங்கானா மற்றும் சீமாந்திராவில் தொடர்ந்தும் செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதாவது 4 மாவட்டங்களைக் கொண்ட ராயலசீமாவை உடைத்து கர்னூல், அனந்தபுரம் மாவட்டங்களை தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்குவது என்பதுதான் காங்கிரஸின் இப்போதைய திட்டம்.

அரசியல் ரீதியாக விளைவுகள் என்ன?

அரசியல் ரீதியாக விளைவுகள் என்ன?

இப்படி ராயலசீமாவை உடைப்பதன் மூலம் அங்கு செல்வாக்கு செலுத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் பலத்தை குறைப்பது காங்கிரஸின் இலக்காக இருக்கிறது. அத்துடன் தெலுங்கானாவுடன் சேர்க்கப்படும் 2 மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் மஜ்லிஸ் கட்சியும் ராயல தெலுங்கானாவை தொடகக்த்தில் இருந்து வலியுறுத்தி வருவதால் காங்கிரஸுக்கு அதன் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என்பது கணக்கு.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

மேலும் சலூன் கடையில் பெண்களை பார்ப்பது மிகுந்த பெருமை அடைய செய்கிறது. அவர்களுக்கு எனது மரியாதையும், தனியார் நிறுவனம் அளித்த உதவித் தொகையும் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சச்சின் கூறியிருக்கிறார். சச்சினின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

ராயல தெலுங்கானாவினால் வேறு லாபங்கள்..

ராயல தெலுங்கானாவினால் வேறு லாபங்கள்..

ராயல தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் வேறு சில நடைமுறை சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. அதாவது சீமாந்திராவின் தலைநகராக கர்னூல் இருக்க வெண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தெலுங்கானாவுடன் இணைத்துவிடும் நிலையில் அந்த கோரிக்கை எழ வாய்ப்பு இல்லை. அதேபோல் ஸ்ரீசைலத்திலிருந்து உற்பத்தியாகும் நீர்மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளாமல் ஒரே பகுதிக்குள் விநியோகிக்க முடியும் என்பது மற்றொரு கணக்கு.

சமமாகும் சட்டசபை தொகுதிகள்

சமமாகும் சட்டசபை தொகுதிகள்

தெலுங்கானா பிரிக்கப்படும் நிலையில் அது 119 சட்டசபை தொகுதிகளையும் 17 லோக்சபா தொகுதிகளையும் பெற்றிருக்கும். அதேபோல் சீமாந்திராவோ 175 தொகுதிகளையும் 25 லோக்சபா தொகுதிகளையும் பெற்றிருக்கும். தற்போது ராயல தெலுங்கானாவை உருவாக்கினால் இந்த ஏற்றத்தாழ்வு சமனடைந்து தலா 147 சட்டசபை தொகுதிகள், 21 லோக்சபா தொகுதிகள் இரு மாநிலங்களுக்கு கிடைக்கும்.

இப்படி சமன்படுத்துவதன் மூலம் ராயல தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் எளிதில் நிறைவேற்றிவிட முடியும் என்பதும் காங்கிரஸின் திட்டமாக இருக்கிறது.

வியூகம் வைக்கப் போகும் வேட்டு

வியூகம் வைக்கப் போகும் வேட்டு

காங்கிரஸின் இந்த புதிய வியூகமானது தனித் தெலுங்கானா கோரிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவுக்கும் வேட்டு வைக்கிறது. ராயலசீமாவில் கோலோச்சும் ஜெகனுக்கும் வேட்டு வைக்கிறது. ராயலசீமா- கடலோர ஆந்திராவில் கணிசமான செல்வாக்கு வைத்திருக்கும் சந்திரபாபுவையும் பதம் பார்க்கிறது. மேலும் கூடுதல் எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கும் இந்த ராயல தெலுங்கானா ஆப்பு வைக்கிறது. இதனாலேயே ராயல தெலுங்கானாவை அமலாக்குவதில் மும்முரம் காட்டுகிறதாம் காங்கிரஸ்.

English summary
The idea of Rayala Telangana is back on the table with precisely that reason. If implemented, Kurnool and Anantapur districts of Rayalaseema region will be added to Telangana state, making the division of Andhra Pradesh equal in Parliamentary terms. Both Rayala Telangana and Seemandhra will then have 21 Lok Sabha and 147 assembly seats each. The intention clearly is to kill several birds with one stone. And the man responsible for pushing Sonia Gandhi towards Rayala Telangana is Kiran Kumar Reddy, whose open revolt has jolted the Congress leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X