For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பிடிபட்ட இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தாவின் தலைவன் ஆசிம் உமர்... திடுக் தகவல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் சிக்கிய இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தாவின் தலைவன் ஆசிம் உமரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அல்கொய்தாவில் இணைந்தது, சிமி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை டெல்லி மற்றும் ஒடிஷா போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் தாக்குதல்களை நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

Why the Indian origin of al-Qaeda's Sub-continent boss needs to be tracked

அத்துடன் நாட்டில் 6 முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்தவும் இந்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்துள்ளனர். இவர்களில் 2 பேர் உத்தரப்பிரதேசத்திலும் மற்றொரு நபர் ஒரிஷாவின் கட்டாக்கிலும் பிடிபட்டுள்ளனர். இவர்களில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஆசிம் உமரும் ஒருவன்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிம் உமர் கடந்த ஆண்டு அல்கொய்தா இயக்கத்தின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட போதே, அவன் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆசிம் உமர் நீண்டகாலம் பாகிஸ்தானிலேயே செட்டில் ஆனவன். 1989ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி வசித்து வந்திருப்பதும் தெரியவந்தது. சிமி இயக்க தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஆசிம் உமர், 1995ஆம் ஆண்டு கராச்சியில் குடியேறி, ஜாமியா உலூம் இ இஸ்லாமியா என்ற பள்ளியில் படித்தான்.

பின்னர் ஹர்கத் உல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்தினான். பின்னர் ஜாமியா உலூம் இ இஸ்லாமியா பள்ளியிலேயே மத போதகராகவும் பணியாற்றினான். பின்னர்தான் அல்கொய்தா இயக்கம் அவனை ஈர்த்தது. அல்கொய்தாவின் ஷரியா கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட ஆசிம் உமருக்கு கொடுக்கப்பட்ட பணி, இஸ்லாமிய இளைஞர்களுக்கு மத போதனைகளை பயிற்றுவித்து அவர்களை அல்கொய்தாவில் சேர்ப்பது என்பதுதான்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானும் மாறி மாறி வசித்து வந்த ஆசிம் உமர், இந்தியாவில் சிமி தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து வந்தான். சிமி இயக்கத்தின் தலைவரான சஃப்தார் நகோரி, அல்கொய்தாவின் ஆதரவைக் கோரியிருந்தார். தற்போது ஆசிம் உமர் குறித்த கூடுதல் தகவல்களை உளவுத்துறையினர் திரட்டி வருகின்றனர்.

English summary
Three persons suspected to be linked to the al-Qaeda were arrested by the Delhi and Odisha police over the past week. While investigators claim that they were planning on carrying out attacks in Delhi, it was also said that they were trying to establish six modules in different parts of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X