For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன இந்தியாவின் முதல் பிரதமர் மோடியா?.. விக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை!

கூகுளில் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தேடினால் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் வந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை!

    டெல்லி: கூகுளில் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தேடினால் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. '

    விக்கிபீடியாவில் மோடியின் புகைப்படம் இருந்ததால் கூகுள் இப்படி தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த விஷயம் நேற்று இணையம் முழுக்க வைரல் ஆனது.

    ஏற்கனவே வரலாற்றை மாற்றி மாற்றி பேசுகிறது என்று பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. தற்போது எல்லா தகவலும் கிடைக்கும் இணைய உலகத்திலேயே இப்படி மோசடி நடந்து இருப்பது கஷ்டம் அளிக்கிறது என்றுள்ளது.

    மோடியின் புகைப்படம்

    மோடியின் புகைப்படம்

    விக்கிபீடியா கூகுளிடம் அளிக்கும் தேடுதல் விடையில் முதல் பிரதமர் என்பதில் சரியாக நேரு என்ற பெயர் இருக்கிறது. ஆனால், பிரச்சனை நேருவின் புகைப்படத்திற்கு பதில் மோடியின் புகைப்படம் இருப்பதுதான். இதனால் இந்தியாவின் முதல் பிரதமர் இவர்தான் என்று விக்கிபீடியா சொல்கிறதா என்று எல்லோரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    இன்னும் அதிகம்

    இன்னும் அதிகம்

    அதேபோல் பிரதமர் மட்டுமில்லாமல் மற்ற தலைவர்கள் பெயரும் தவறாக வந்தது. முதல் நிதி அமைச்சர் யார் என்றால் அருண் ஜெட்லி படம் வந்தது. அதேபோல் முதல் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு நிர்மலா சீதாராமன் புகைப்படம் வந்தது. பாஜக கட்சியில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களின் புகைப்படம் மட்டுமே இதில் வந்தது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதற்கு கூகுளின் அல்காரிதம்தான் காரணம். நாம் தேடும் விஷயத்திற்கான பதிலைத்தான் அது விக்கிபீடியாவில் இருந்து எடுத்து கொடுக்கும். ஆனால் பிரதமர் என்று இடத்தில் விக்கிபீடியா கடைசியாக மோடியின் புகைப்படத்தைத்தான் வைத்து இருக்கும். ஆகவே கூகுள் இந்த புகைப்படத்தைதான் வெளியே காட்டும். இது கூகுள், விக்கிபீடியா இருவரின் அல்காரிதம் காரணமாக வந்த பிரச்சனை ஆகும்.

    சரி செய்தது

    சரி செய்தது

    இணையம் முழுக்க நேற்று இந்த பிரச்சனை வைரல் ஆனது. இதற்கு எதிராக இணையத்தில் பலரும் குரல் கொடுத்து இருந்தனர். இதனால் தற்போது கூகுள் இந்த முடிவுகளை மாற்றி இருக்கிறது. முதல் பிரதமர் நேருதான் என்று சரி செய்து சரியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

    English summary
    Wikipedia shows Narendra Modi's Photo in 'India's First PM' Search due to the problem in Google algorithm. Now google solved the problem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X