For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மனைவி சேலை கட்டுகிறார், யாரும் டீஸ் செய்வதில்லை.. சொல்வது கோவா அமைச்சர்!

Google Oneindia Tamil News

பனாஜி: சேலை கட்டுவதால் தனது மனைவி என்றுமே ஈவ்டீசிங்கிற்கு ஆளானதில்லை என மனைவியின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் கோவா அமைச்சர் தீபக் தவாலிகர்.

சமீபத்தில் இந்து ஜனஜக்ருதி சமிதி ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட தவாலிகரின் மனைவி லதா, ‘சமீபகாலமாக பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு காரணம் பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறியதே' எனத் தெரிவித்திருந்தார்.

Wife never eve-teased as she wears sarees: Goa minister

இது தொடர்பாக தவாலிகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனது மனைவி தனது வாழ்நாள் முழுவதும் சேலை அணிந்து, குங்குமம் வைத்து வாழ்ந்து வருகிறார். அதனால், இதுவரை அவரை யாரும் ஈவ்-டீசிங் செய்ததில்லை. எனவே, தனது அனுபவத்தைத்தான் அவர் மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார்' என விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முன்பெல்லாம் பாலியல் பலாத்காரங்கள் குறைவாக இருந்தன. காரணம், அப்போதெல்லாம் பெண்கள் இந்து தர்மத்தின்படி வாழந்தனர். எனவே அப்படிப்பட்ட சம்பவங்கள் குறைவு. இப்போது கலாச்சாரம் மாறியதால் பிரச்சினைகளும் கூடியுள்ளன என்றார் அவர்.

English summary
After there were reports of his wife's comments about Western culture causing rape, Goa Minister for Factories and Boilers Deepak Dhavalikar defended her statement, claiming his spouse has never been eve-teased because she wears sarees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X