For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நேருவின் தாத்தா ஒரு முஸ்லீம்"... விக்கிபீடியா தகவலில் திருத்தம் செய்தது யார்?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: முன்னாள் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் தாத்தா ஒரு முஸ்லீமாக இருந்தவர் என மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய தகவல் மையத்தின் ஐபி அட்ரஸில் இருந்து விக்கிபீடியாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சாப்ட்வேர் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

விக்கிபீடியாவில் பெயர் தெரிவிக்காமல் யாராவது அதில் மாற்றங்கள் செய்தால் அதை கண்டுபிடிக்க சாப்ட்வேர் உள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மூதாதையர்கள் பற்றிய விவரத்தை யாரோ மாற்றியதை அந்த சாப்ட்வேர் கண்டுபிடித்துள்ளது. அந்த மாற்றங்களை ஆன்லைன் என்சைக்ளோபீடியா ஆசிரியர்கள் அழித்துவிட்டனர்.

Wiki entries on Nehru family edited from NIC IP?

நேரு குறித்த விக்கிபீடியா விவரங்கள் மாற்றப்பட்டது குறித்து அந்த சாப்ட்வேரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இன்டர்நெட் மற்றும் சமூக மைய கொள்கை தலைவர் பிராணேஷ் பிரகாஷ் கூறுகையில்,

விக்கபீடியாவில் நேருவின் குடும்பத்தார் பற்றி செய்த மாற்றங்கள் அனைத்தும் ஒரே ஐபி அட்ரஸில் இருந்து வந்துள்ளது. அந்த ஐபி அட்ரஸ் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய தகவல் மையத்துடையது. யார் யார் எல்லாம் தேசிய தகவல் மையத்தின் ஐபி அட்ரஸை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. அதனால் விக்கிபீடியாவில் மாற்றம் செய்தது யார் என்பதை குறிப்பிட்டு கூற முடியாது என்றார்.

நேருவின் தாத்தா கங்காதர், கியாசுத்தீன் காசி என்ற முஸ்லீமாக பிறந்தவர். ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அவர் இந்துவாக மாறி கங்காதர் என பெயர் வைத்துக் கொண்டார் என்று விக்கிபீடியாவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கங்காதரின் பக்கத்தை போன்று அவரது மகன் மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேருவின் பக்கங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவின் பக்கத்தில் அவருக்கும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவுக்கும் இருந்த கள்ளத் தொடர்பு குறித்த விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
Wikipedia entries on Nehry family has been edited from an IP address that belongs to government owned National Informatics Centre (NIC).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X