For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைகோர்ட் தீர்ப்பு 'கணித தவறுகளின் சோகம்'.. ஜெ. மீண்டும் முதல்வர் பதவியை இழப்பார்: சு.சுவாமி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து சு.சுவாமி கூறுகையில், ஹைகோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்து பாரத்த பிறகு, எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை பரிசீலித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த வழக்கை அப்படியே போகட்டும் என்று விட முடியாது என்றார்.

WILL APPEAL AGAINST VERDICT IN JAYALALITHAA CASE - SWAMY

இதனிடையே, இன்று தனது டிவிட் ஒன்றில் சு.சுவாமி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளேன். ஹைகோர்ட் தீர்ப்பு, 'கணித தவறுகளின் சோகம்'. எனவே, ஜெயலலிதா முதல்வரானால், மீண்டும் தனது பதவியை அவர் இழக்க வேண்டிவரும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தபோது, கன்னடர்கள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக கூறினார். ஹைகோர்ட் விடுதலை செய்தால் அது நியாயம். சுப்ரீம்கோர்ட் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தால் அப்போது என்ன சொல்வார் என்று சு.சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை கணக்கு போட்டு பார்த்து சுமார் 8.12 சதவீத சொத்துக்கள்தான், கணக்கில் வராதவை என்று கூறிய ஹைகோர்ட், அதிகபட்சம் 10 சதவீதம் வரை கணக்கு காட்ட முடியாத சொத்துக்கள் இருக்க அனுமதியுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
In my Appeal to SC In JJ DA case. I will prove that the, KHC judgment is a "tragedy of arithmetic errors". JJ will have to resign again if CM, Swamy tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X