For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை- ஷிண்டே

By Mathi
Google Oneindia Tamil News

டையூ: குஜராத்தில் இளம் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கபட்டதாக எழுந்த சர்ச்சையின் பின்னனியில் அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியும், முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Will Appoint SC Judge to Probe Snoopgate Soon: Shinde

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா பிரதீப் சர்மா அளித்த புகாரின் பேரில் மோடி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்ய குஜராத் போலீசார் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் டையூவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றார்.

English summary
A retired judge of the Supreme Court would be appointed "soon" to probe charges of spying on a young woman by Gujarat government in 2009, Union Home Minister Sushilkumar Shinde today said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X