• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

"டேக் ஓவர்".. அக்கா.. அக்கா என்று சொல்லி கொண்டே.. டேமேஜ் செய்யும் மோடி.. திமிறி எழும் மம்தா!

|

கொல்கத்தா: 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 எம்எல்ஏக்களைப் பிடித்த பாஜக, 218 எம்எல்ஏக்கள் உடைய பலம்பொருந்திய திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து வருகிறது அதன் அசுர வளர்ச்சியை காட்டுகிறது.. இதையடுத்து, மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

இத்தனை கால அரசியலைவிட இந்த முறை நடக்கும் தேர்தலை வென்றெடுபப்தே மம்தாவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.. இதற்கு பல காரணங்கள் உள்ளன... முதலாவதாக, பாஜக என்ற கட்சியே முன்பு போல இல்லை.. அதன் வியூகம் யாராலும் கடைசி நொடி வரை கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது..

"வங்க மிஷின்" என்பதை மம்தாவால் முறியடிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.. அடுத்ததாக, பிரதமர் மோடி, அமித்ஷா முதல், பல மாநில பாஜக அமைச்சர்கள், முதல்வர்கள் வரை மேற்கு வங்கத்தில் நேரடியாகவே களமிறங்கி உள்ளனர்.

கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா! கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா!

 மம்தா

மம்தா

ஆனால் மம்தாவுக்கு இந்த அளவுக்கு நாடு முழுவதும் செல்வாக்கு நிறைந்தவர்கள் குறைவு.. தனக்குதானே பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டும்.. அந்த வகையில் "பாப்புலாரிட்டி" என்ற ரீதியில் பிரச்சாரங்கள் அடிபட்டுள்ளது. மூன்றாவதாக, மத்திய சர்க்காரையே தன்னிடம் குவித்து வைத்துள்ளது பாஜக.. தேர்தல் ஆணையம், ராணுவம், போலீஸ் முதல் பல அரசு எந்திரங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும்போது, இதை எதிர்த்து ஒரு மாநில முதல்வர் வேட்பாளர் சமாளிக்க வேண்டியது அவசியமாகிறது.

பாஜக

பாஜக

நான்காவதாக, எதிர்தரப்பில் உள்ளவர்கள் முதல் அதிருப்திகள் வரை பாஜக, தட்டி தூக்கி தங்கள் பக்கம் இழுத்து வரும் நிலையில், தன்னிடம் விசுவாசமாக இருந்தவர்களையே இழந்துவிட்டு மம்தா இன்று தனித்து விடப்பட்டுள்ளார்.. சுவேந்து போன்ற அதிகாரிகள் முதுகில் குத்தியதையும் ஜீரணித்து கொண்டு, பாஜகவை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

வீல்சேர்

வீல்சேர்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, காலில் அடிபட்டு வீல்சேரில் வலம் வருகிறார் மம்தா.. எப்போதுமே மம்தாவை பொறுத்தவரை ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.. யாராக இருந்தாலும் சகஜமாக பேசும் குணமுடையவர்.. திடீரென காரில் இருந்து இறங்கி வந்து கை குலுக்குவார்.. பிரச்சார சமயங்களில் மம்தாவின் செயல்பாடுகள் அம்மாநில மக்களையே வியக்க வைக்கும் அளவுக்கு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழல்வார்.. இப்போது வீல் சேரில் ட்ரீட்மென்ட்டில் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது அவருக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.. அதேசமயம், மக்களிடம் இந்த "வீல்சேர் அரசியல்" அனுதாபத்தையும் பெற்று தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அமித்ஷா

அமித்ஷா

இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளை வைத்து கொண்டுதான், பாஜக என்ற மலையை, மம்தா என்ற ஒற்றை மனுஷி எதிர்கொள்கிறார்.. இந்த துணிச்சலுக்கே ஒரு சபாஷ் போடலாம்.. வேறு எந்த மாநிலத்திலும், அமித்ஷா - மோடி என்ற ஜாம்பவான்களை, இப்படி துணிந்து எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் தனிப்பட்ட முறையில் இல்லை.. கூட்டணியாக வேண்டுமானால் எதிர்த்திருக்கலாமே தவிர, தனி நபராக, அதுவும் ஒரு பெண்ணாக நின்று எதிர்கொள்வது இதுதான் முதல்தடவை.

 4 கட்ட தேர்தல்

4 கட்ட தேர்தல்

இந்த மாநிலத்தில் எதற்காக 8 கட்டங்களாக தேர்தல், நடத்த வேண்டும்? வழக்கமாகவே 5 கட்டம், மிஞ்சிப்போனால் 6 கட்ட தேர்தலை மட்டுமே இந்த நாடு கண்டுள்ளது.. ஆனால், ராணுவம், போலீஸ் போன்ற சக்தி வாய்ந்த துறைகளை கையில் வைத்து கொண்டு, ஒரு மாநில தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாத அளவுக்கு அங்கு என்ன பிரச்சனை என்பது இதுவரை தெரியவில்லை.. எனினும், நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலில் பதற்றம், வன்முறைகள், அதையொட்டிய பிரச்சனைகள், பஞ்சாயத்துகள், நடந்து கொண்டிருக்கின்றன.

 24 மணி நேரம்

24 மணி நேரம்

இதில் 2 விஷயங்கள் மிகவும் பேசப்பட்டு வருகின்றன.. மம்தா விதிகளை மீறிவிட்டார் என்பதற்காகவே 24 மணி நேர தடை விதிக்கப்பட்டது.. அதுபோலவே, உள்ளூர் பாஜக தலைவருக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.. இரண்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய தடைகள் தான் என்றாலும், மேல்மட்ட பாஜக தலைவர்கள் சிறுபான்மை மக்களை மோசமாக விமர்சித்தே வந்துள்ளனர்.. அந்த வகையில், மேல்மட்ட பாஜக தலைவர்களின் பிரச்சாரங்களுக்கும் ஏன் தடை விதிக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகிறது.

முஸ்லிம்

முஸ்லிம்

மற்றொன்று, அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் யாருக்கு சாதகமாக வாக்களிக்க போகிறார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. காரணம், இந்தியாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் வாக்குகள் இங்குதான் உள்ளன.. கிட்டத்தட்ட 30 சதவீதம் ஓட்டு வங்கி இருப்பதால், இவர்கள்தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார்கள்..

 பிரச்சாரம்

பிரச்சாரம்

அந்த வகையில், முஸ்லிம் வாக்குகள் 3வது அணிக்கு சாதகமாக போனால், அது மம்தாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. ஒரு மாநில முதல்வருக்கே பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட அதிசயங்களை மேற்கு வங்கம் நடத்தி வரும் நிலையில், இந்த மாநில தேர்தல் வெற்றி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது..

 தீதி தீதீ

தீதி தீதீ

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. மோடி Vs மம்தா என்ற ரீதியில்தான் தேர்தலே சந்திக்கப்பட்டு வருகிறது. ஒரு பிரதமர், மாநில முதல்வரை நேரடியாகவே எதிர்ப்பது போல பிம்பம் இது.. எங்கு பிரச்சாரம் செய்தாலும், தீதீ தீதீ என்று சொல்லி கொண்டே, மோடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பகீர்களும் மம்தாவுக்கு பெரும் குடைச்சலை தந்து வருகிறது.. அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார் மம்தா... ஒருவேளை மம்தா இந்த தேர்தலில் வென்றால், அது மிகப்பெரிய வரலாற்று சாதனையே.. அதுமட்டுமல்ல, பாஜகவை யாருமே வெல்ல முடியாது, தோற்கடிக்க முடியாத சக்தியாக ஒன்றும் பாஜக கிடையாது என்பது இனி வரலாற்றில் தெளிவாகும்... பார்ப்போம்..!

English summary
Will BJP overtake Mamta Banerjee in West Bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X