For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபக் மிஸ்ரா தகுதி நீக்கம் சாத்தியமா?... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தீபக் மிஸ்ரா தகுதி நீக்க மனு..ஆலோசனையில் வெங்கய்யா- வீடியோ

    டெல்லி : இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன. தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய சட்டம் என்ன சொல்கிறது, தீபக் மிஸ்ராவை வட்டமிடும் சர்ச்சைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றது முதல் அவரை சுற்றி பல சர்ச்சைகள் வட்டமிட்டு வருகின்றன. தீபக் மிஸ்ராவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெகுண்டெழ என்ன காரணம்?

    Will impeachment motion against CJI Dipak Misra win?

    • உச்சநீதிமன்றத்தின் இதர நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து வழங்குவதில் பாரபட்சம்
    • உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேரே இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தனர்
    • அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதி தன்னிச்சையாக எடுக்கிறார்
    • நீதிபதி லோயா மரணம் தொடர்பான சிறப்பு புலனாய்வு விசாரணையை தள்ளுபடி செய்து உத்தரவு
    • தீபக் மிஸ்ராவால் நீதித்துறை மீது சந்தேகம் எழுந்துள்ளது
    • ஜனநாயகத்தை நீதித்துறை பாதுகாக்குமா என்ற சந்தேகத்தால் இக்கட்டான நிலையில் நீதித்துறை
    • என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தீபக் மிஸ்ரா மீது வைக்கப்படுகிறது.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்க என்ன வழிமுறை?
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்க ராஜ்யசபாவில் 50 எம்.பிக்கள், லோக்சபாவில் 100 எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும்
    • இம்பீச்மென்ட் தீர்மானத்தை ஏற்பது பற்றி ராஜ்யசபா தலைவர் இறுதி முடிவெடுப்பார்
    • தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட 3 நபர் விசாரணைக்குழு அமைக்கப்படும்
    • தலைமை நீதிபதி மீதான குற்றத்திற்கு முகாந்திரம் இருப்பது உறுதியானால் சபையில் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
    • தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்வார்

    English summary
    Will impeachment motion against CJI Dipak Misra win? Here are the facts to know about impeachement motion of opposition parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X