For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி, கர்நாடகா பாணியில் காஷ்மீரில் பாஜகவுக்கு எதிராக பிடிபி-என்சிபி-காங். புதிய அணி உருவாகுமா?

காஷ்மீரில் பாஜக அல்லாத கட்சிகள் ஓரணியில் ஒன்று திரள்கின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் அதிரடி ராஜினாமா- வீடியோ

    டெல்லி: உத்தரப்பிரதேச இடைத்தேர்தல்களில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கை கோர்த்த பாணியில் காஷ்மீரில் பாஜகவுக்கு எதிராக முப்தியின் பிடிபி, உமர் அப்துல்லாவின் என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கை கோர்க்குமா? என தேசிய அளவில் விவாதம் தொடங்கியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தற்போதைய நிலவரம்: முப்தியின் பிடிபி 28; பாஜக -25; என்சிபி 15; காங்கிரஸ் 12 இடங்கள். இங்கு பெரும்பான்மைக்கு தேவை 47 எம்.எல்.ஏக்கள்.

    Will PDP join hands with Cong and NCP?

    தற்போதைய நிலையில் பிடிபி-என்சிபி- காங்கிரஸ் இணைந்தால் பெரும்பான்மைக்கு மிக அதிகமான இடங்கள் கிடைக்கும். உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கை கோர்த்தன.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்ற போதும் ஜேடிஎஸ்-ன் குமாரசாமியை முதல்வராக அறிவித்து பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்தது. தற்போது ஜம்மு காஷ்மீரிலும் இதே யுக்தி கடைபிடிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    முதல் கட்டமாக, பிடிபி-பாஜக கூட்டணி உடைந்ததில் மகிழ்ச்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது மெகபூபாவை ஆதரிக்கும் சூழல் இல்லை எனவும் சுடிட்க்காட்டியிருக்கிறது காங்கிரஸ்.

    அதேநேரத்தில் உமர் அப்துல்லாவோ, மெகபூபாவை ஆதரித்து குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிரான அத்தனை கட்சிகளும் காங்கிரஸில் சேருமா? சேராதா? என்பதுதான் தேசிய அளவிலான விவாதமாக இருந்து வருகிறது,

    English summary
    Congress has ruled out tie-up with the PDP after the BJP pulled out of the ruling alliance in Jammu and Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X