For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்: உம்மன் சாண்டி

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது பல புகார்கள் தெரிவித்து வருகிறார். அதை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சரிதா நாயரின் குற்றச்சாட்டுகளை சாண்டி ஏற்கனவே மறுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

அரசியல்

அரசியல்

சோலார் பேனல் மோசடி வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அந்த குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதம் அளவுக்கு கூட உண்மை இருந்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார்.

மக்கள்

மக்கள்

நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மனசாட்சி சுத்தமானது. மக்களுக்கு எல்லாம் புரிகிறது. மீடியாக்களுக்கு தான் கடைசியில் புரிகிறது. இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து தான் இடதுசாரி கட்சிகள் பதட்டமாக உள்ளன.

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று அவர்கள் நினைத்தால் சட்டசபை தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டியது தானே? அவர்கள் பயப்படுகிறார்கள்.

சரிதா நாயர்

சரிதா நாயர்

கடந்த 2014ம் ஆண்டு ஒரு முன்னணி பத்திரிக்கையில் சரிதா நாயரின் பேட்டி வெளியானது. அதில் முதல்வருக்கு எதிராக பேச சரிதாவுக்கு சிபிஎம் ரூ.10 கோடி அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவதூறை பரப்புவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

English summary
Kerala CM Oommen Chandy said that if there is even one percent truth in the allegations levelled against him in the solar scam, he will quit politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X