For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவர்.. சோனியா காந்தியா.. ராகுலா.. ஏன் இத்தனைக் குழப்பம்.. ஏப்ரலில் முடிவு தெரியும்

Google Oneindia Tamil News

Recommended Video

    what happened to congress?

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பாரா அல்லது ராகுல் காந்தி மீண்டும் தலைவர் ஆவாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து ஏப்ரல் மாதம் முடிவெடுக்கவுள்ளது காங்கிரஸ் கட்சி.

    காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி சமீப காலமாக பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தொடர் தோல்விகளால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

    சோனியா காந்தியிடமிருந்த தலைவர் பதவி ராகுல் காந்திக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவரது தலைமையில் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை. முக்கியமாக லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. ராகுல் தலைமையும் விமர்சனத்துக்குள்ளானது.

    கெஜ்ரிவால் அமைச்சரவையில் 7 பேரில் இருவர் நீக்கம்? அதிஷிக்கும் ராகவுக்கும் அமைச்சர் பதவியா? கெஜ்ரிவால் அமைச்சரவையில் 7 பேரில் இருவர் நீக்கம்? அதிஷிக்கும் ராகவுக்கும் அமைச்சர் பதவியா?

    இடைக்கால தலைவர்

    இடைக்கால தலைவர்

    இதையடுத்து பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி. அவரை சமாதானப்படுத்த நடந்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இன்று வரை அவர்தான் தலைவராக இருந்து வருகிறார்.

    டெல்லி ஷாக்

    டெல்லி ஷாக்

    இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பூஜ்யம் என்ற நிலைக்குப் போயிருப்பது கட்சியினரை அதிர வைத்துள்ளது. அதை விடமுக்கியமாக 63 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். ஒரு காலத்தில் நாம் கோலோச்சிய டெல்லியா இது என்று அதிர்ந்து நிற்கிறது காங்கிரஸ்.

    வருவாரா ராகுல் காந்தி

    வருவாரா ராகுல் காந்தி

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீண்டும் தலைவராவாரா என்ற எதிர்பார்ப்பு மறுபடியும் கிளம்பியுள்ளது. ஆனால் ராகுல் இன்னும் இதுகுறித்து யோசித்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெறவுள்ளது. அப்போது தலைவர் பதவி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

    சோனியா உடல் நலம்

    சோனியா உடல் நலம்

    சோனியா காந்திக்கு முன்பு போல உடல் நலம் இல்லை. அதையும் மீறித்தான் அவர் தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் தோல்வியிலிந்து இன்னும் மீளாமல் உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். புதிய ஆக்கப்பூர்வமான, வலிமையான தலைவர் உடனடியாக தேவை என்று அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    தீவிர தலைவர்

    தீவிர தலைவர்

    நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பெரும் தொய்வில் உள்ளது. எனவே அதை கட்டியமைக்க, வலுவுள்ளதாக மாற்ற ஒரு நல்ல வலிமையான, எனர்ஜியான தலைவர் உடனடி தேவை என்பதே காங்கிரஸ் கட்சியினரின் எண்ணமாக உள்ளது. ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும், பாஜகவுக்கு எதிராக தீவிர அரசியலில் இறங்க வேண்டும் அல்லது பிரியங்கா காந்தியை இறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இளம் தலைவர் தேவை

    இளம் தலைவர் தேவை

    அதேசமயம், வேறு யாராவது ஒரு நல்ல இளம் தலைவரை காங்கிரஸ் தலைவராக்கி கட்சியை வலிமைப்படுத்த முயல வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாத நிலையே ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமை இப்படி தள்ளாட்டத்தில் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள்.

    English summary
    Will Rahul Gandhi take charge of the presidentship of AICC?, The party will decide about it in April conference.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X