For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா பாஜக அரசில் சிவசேனா இல்லை! முதல்வர் பட்நவிஸ் பதவியேற்பை புறக்கணிக்க முடிவு!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக அமைக்கும் முதலாவது அரசில் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசில் சிவசேனா சேருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான சிறிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Will Shiv Sena join Fadnavis' BJP govt? Uddhav Thackeray to decide today

பாரதிய ஜனதா அரசு சிறுபான்மை அரசாக இருப்பதால் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஆதரவு தர முன்வந்தது. அதே நேரத்தில் துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் இடம் உள்ளிட்ட நிபந்தனைகளையும் சிவசேனா தரப்பு முன்வைத்தது. ஆனால் பாஜக இதை ஏற்கவில்லை.

தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை முதல்வர் பட்நவிஸ் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா அரசில் சிவசேனா சேரவில்லை என்று பாஜக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சிவசேனா நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
As BJP prepares for the inauguration of its first government in Maharashtra under Devendra Fadnavis on Friday, its estranged partner Shiv Sena has said it will announce its decision on whether it will be part of the BJP-led ministry on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X