For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு-வீடியோ

    டெல்லி: தாஜ் மஹாலை இடித்துவிட்டால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

    காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து உத்தர பிரதேச மாநில அரசு நீக்கியது. தாஜ் மஹாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கூறியிருப்பதாவது,

    சுற்றுலாத்தலம்

    சுற்றுலாத்தலம்

    தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கிய யோகி ஆதித்யநாத் முடிவை நான் வரவேற்கிறேன். அது ஏன் பட்டியலில் இருந்து நீக்குவது பேசாமல் தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் நாங்கள் யோகி அரசுக்கு ஆதரவு அளிப்போம்.

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்

    தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப்மினார், நாடாளுமன்றம் ஆகிய கட்டிடங்கள் அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளன. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் சரியான முடிவை எடுத்துள்ளார் என்றார் ஆசம் கான்.

    யோகி அரசு

    யோகி அரசு

    தாஜ்மஹால் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகும். அங்குள்ள வசதிகளை மேம்படுத்த ரூ. 156 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்று உ.பி. மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா பஹுகுனா தெரிவித்துள்ளார்.

    கண்டனம்

    கண்டனம்

    சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியதற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்து குறிப்பிடத்தக்கது.

    English summary
    Samajwadi party leader Azam Khan said that he will support UP government if it demolishes Taj Mahal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X