For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் பாஜக.. வெறும் 16 எம்எல்ஏக்கள்தான்.. 218 பேருடன் கூடிய மமதா ஆட்சியை ஆட்டி படைக்கிறதே!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெறும் 16 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து கொண்டு, 218 எம்எல்ஏக்கள் உடைய பலம்பொருந்திய திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து வருகிறது பாஜக... போகிற போக்கைப் பார்த்தால் மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்தை ரவுண்டுகட்டி வருவது மம்தாவுக்கு சற்று கலக்கத்தையே தந்து வருவதாக கருதப்படுகிறது.. கடந்த 9 வருஷமாக ஸ்டிராங் ஆக ஆட்சியில் நீடித்து வரும் மம்தா, 2014-வரை எங்கோ கண்காணாமல் இருந்த பாஜகவை சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.

2014-ல் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு வெறும் 2 தொகுதிகள்தான் கிடைத்தது.. அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ் அந்தத் தேர்தலில் 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.. இதையடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் 211 இடங்களை கைப்பற்றியிருந்தது திரிணாமுல் காங்கிரஸ்.

இது செம.. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. அடுத்த ஆட்சியும் கேரளாவில் இடதுசாரிகள்தான்!இது செம.. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. அடுத்த ஆட்சியும் கேரளாவில் இடதுசாரிகள்தான்!

 கள வேலைகள்

கள வேலைகள்

இதற்கு பிறகுதான், அதாவது 2016 தேர்தலுக்கு பிறகே பாஜக விழித்து கொண்டது.. உஷாரானது.. கள வேலைகளில் மிக தீவிரமாக இறங்கியது.. 2016க்கு பிறகு பெருவாரியான பணத்தை செலவு செய்தது.. சோஷியல் மீடியாவில் நிறைய விளம்பரங்களை செய்தது.. ராம் நவமி உள்ளிட்ட விழாக்களை கொண்டாடி, இளைஞர்களையும் ஈர்த்தது.. பல வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து, பாஜக தரப்பின் பரபரப்பை அப்படியே வைத்திருந்தன. இதெல்லாம்தான் மெல்ல மெல்ல பாஜக தன்னை மேற்கு வங்கத்தில் நிலைநிறுத்தி கொள்ள காரணமாக இருந்தது.

மம்தா

மம்தா

இதன் விளைவு, 2019 எம்பி தேர்தலில் 42 தொகுதிகளில் 18 இடங்களை கைப்பற்றும் அளவுக்கு மேலே வந்தது பாஜக. அப்போதுதான், அதுவரை அசால்ட்டாக இருந்த மம்தாவின் கவனம் பாஜக மீது திரும்ப தொடங்கியது.. இதையொட்டிதான், பிரசாந்த் கிஷோரையே மம்தா வியூகம் அமைக்க நியமனம் செய்தார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

 கட்சி தாவல்

கட்சி தாவல்

ஆனால், இங்குதான் பாஜக சமயோஜிதமாக செயல்பட்டுள்ளது.. பிரசாந்த் கிஷோரை மம்தா நம்பினால், பாஜகவோ மம்தா கட்சியில் உள்ளவர்களுக்கே கொக்கி போடும் வேலையில் இறங்கி வந்துள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது. அப்படித்தான் மிக முக்கியமான சுவேந்து அதிகாரி கட்சி தாவி உள்ளார்.. இப்போதே 3 பேர் பாஜக பக்கம் வந்துள்ள நிலையில், எப்படியும் மேலும் பலரை அடுத்த சில மாதங்களுக்குள்,கொண்டு வந்து விடுவார்கள் என்று கணக்கு போடப்பட்டு வருகிறது.

மதம்

மதம்

கடந்த தேர்தலின்போது, பாஜக மதத்தை முன்னிறுத்தியே மம்தாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது.. அது அவர்களுக்கு பலமாகவும் இருந்தது.. அந்த வகையில், மேற்கு வங்க அரசியல் சூழல் மெல்ல மாறி வரும் நிலையில், இந்த முறையும் அதுபோன்றே ஒரு யுக்தியை பாஜக மேற்கொள்ளுமா என்பது தெரியவில்லை.. ஆனால், திரிணாமுல் காங்கிரஸை மிஞ்சி பாஜக செல்லுமா என்று தெரியாவிட்டாலும், அந்த கட்சிக்கு சரிக்கு சமமான பலத்தை இப்போதைக்கு பெற்றுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சவால்

சவால்

இப்போதுவரை பாஜகவின் அதிரடி நகர்வுகள், திரிணாமுல் காங்கிரஸில் அடுத்தடுத்த குழப்பங்களுக்கு வழிவகுத்தபடியே வந்தாலும், மம்தா உறுதியுடனே இருக்கிறார்.. "முடிந்தால் இந்த ஆட்சியை வீழ்த்தி பாருங்க" என்று பாஜகவுக்கு நேரடியாகவே சவால் விட்டுள்ளார்.. 218 எம்எல்ஏக்களுடன் பலம் வாய்ந்த ஆட்சி இருக்கும்போது, பாஜகவின் திட்டம் நிறைவேறுமா? அல்லது மம்தாவின் கனவுதான் நொறுங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Will the BJP win in West Bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X