For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓர் ஏவுகணைக்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க போகிறதா அமெரிக்கா.. என்ன நடக்கிறது?

இந்தியா - ரஷ்யா செய்திருக்கும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்கா எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: இந்தியா - ரஷ்யா செய்திருக்கும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளது.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார். இதில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    மேலும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஏவுகணை இந்திய பாதுகாப்பு துறைக்கு வலு சேர்க்கும். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கோபமாக உள்ளது.

    எப்போது உருவாக்கப்பட்டது

    எப்போது உருவாக்கப்பட்டது

    இத்தனை பிரச்சனைக்கும் காரணமான இந்த ஏவுகணை எஸ்-40, கடந்த 1990 ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போது இது எஸ் - 300 என்று அழைக்கப்பட்டது. ரஷ்ய தயாரிப்பான இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் 2007ம் ஆண்டில் முழுமையாக ரஷ்ய ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.

    எப்படிப்பட்டது

    எப்படிப்பட்டது

    இந்த எஸ்-400 ஏவுகணை, 4 சிறிய ஏவுகணைகளை தனக்குள் உள்ளடக்கியது. தற்போது உலகில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் வலிமை வாய்ந்த ஏவுகணை இதுதான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 300 டார்கெட்டுகளை தாக்கி அழிக்க முடியும். நான்கும் சேர்த்து வெவ்வேறு திசையில் சென்று தாக்க முடியும்.

    மிக துல்லியம்

    மிக துல்லியம்

    வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும். துல்லியம்தான் இதன் சிறப்பு.

    தடை விதித்தது

    தடை விதித்தது

    அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க கூடாது. சில போர் கருவிகள் தவிர (விமானம் போன்றவை) மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை போன்ற கருவிகளை வாங்க கூடாது. இதை மீறி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    வாய்ப்பு என்ன உள்ளது

    வாய்ப்பு என்ன உள்ளது


    இதனால் அமெரிக்கா மூன்று விதமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.

    1. இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது.

    2. அமெரிக்க அதிபர் தனக்கு உரிய அதிகாரம் மூலம் இந்தியாவிற்கு மட்டும் பொருளாதார தடையில் இருந்து விலக்கு அழிப்பது.

    3. இந்தியா ரஷ்யாவுடனான போர் உறவுகளை உடனே முறிக்க முடியாது என்பதால், இந்த போர் வர்த்தக உறவை முறித்துக் கொள்ள இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்பது. இந்த மூன்றாவது முடிவிற்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    US may bring economic sanctions on India over a Russian S-400 Missile.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X