For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

ஜம்மு: பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் சனிக்கிழமை பணியில் சேர்ந்தார். அப்போது அவருடன் ஏராளமான வீரர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாமை இந்தியா வான் வழித் தாக்குதல் நடத்தி அழித்தது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் வான் வழித் தாக்குதல் நடத்த புறப்பட்டது. அந்த விமானங்களை இந்திய விமான படையினர் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.

அடித்துக் கொள்ளும் மகன்கள்.. தீரா துயரத்தில் லாலு பிரசாத்.. பரபரக்கும் பீகார் அரசியல்! அடித்துக் கொள்ளும் மகன்கள்.. தீரா துயரத்தில் லாலு பிரசாத்.. பரபரக்கும் பீகார் அரசியல்!

பிணை

பிணை

அப்போது மிக் ரக விமானம் ஒன்றை விங் கமாண்டராக உள்ள அபிநந்தன் இயக்கினார். இதில் பாகிஸ்தான் வீசிய குண்டுவீச்சில் இருந்து தப்ப பாராசூட் மூலம் கீழே குதித்தார். அப்போது பாகிஸ்தான் எல்லையில் அவர் விழுந்ததை அடுத்து அவரை அந்நாட்டினர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி பிடித்து வைத்துக் கொண்டனர்.

 4 வாரங்கள்

4 வாரங்கள்

இவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய விதத்தை அந்நாட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்திய அரசு முயற்சியின் பேரில் அவர் மார்ச் 1-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். பாராசூட் மூலம் கீழே குதித்ததால் காயமடைந்த அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை நடத்தி முடிக்கப்பட்டு 4 வாரங்கள் விடுப்பு அளிக்கப்பட்டது.

மீண்டும் பணி

இதையடுத்து அபிநந்தன் மீது மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஸ்ரீநகரில் அவருக்கு அமைதியான ஒரு இடத்தில் பணிமாறுதல் வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து ஜம்மு- காஷ்மீரில் அபிநந்தன் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

 வேண்டுதல்

வேண்டுதல்

இந்த நிலையில் அவர் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி, வீடியோக்கள் நேற்றைய தினம் வைரலாகி உள்ளன. இதுகுறித்து அபிநந்தன் கூறுகையில் இந்த போட்டோக்கள் எல்லாம் உங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல. நான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என உங்கள் குடும்பத்தினரின் வேண்டுதலுக்காக. அவர்கள் அனைவரையும் என்னால் சந்திக்க இயலாது என்பதால்தான் என அபிநந்தன் கூறியுள்ளார். இந்த வீடியோ ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த வீடியோவில் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரிகிறது.

English summary
First video since he was discharged from hospital, here’s Wing Commander Abhinandan Varthaman taking pictures with men. This is likely sometime last month. Video from some Air Force groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X