For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் திங்கட்கிழமை கூடுகிறது.

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப் பட்டுள்ளது.

Winter Session of Parliament to begin from Nov. 24

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 67 மசோதாக்கள் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. இவற்றில் 9 மசோதாக்கள் கடந்த கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

40 மசோதாக்கள் கடந்த ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டவை. 18 மசோதாக்கள் அதற்கு முன்பு நிறைபேற்றப்பட்டாமல் இருப்பவை.

நிலுவையில் உள்ள 67 மசோதாக்களில் 11 மசோதாக்கள் சுகாதாரம் மற்றும் குடும்பல நலன் பற்றியவை. 9 மசோதாக்கள் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பானவை.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாக்கள் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டவை. கட்டிடங்கள் மற்றும் கட்டு மான தொழிலாளர் தொடர் பான மசோதா 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிலுவையில் உள்ளது.

English summary
The Winter Session of Parliament begins from November 24 and ends on December 23. It will consist of 22 sittings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X