For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடியது குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர்.. புயல் வீசுமா.. புஸ்வாணம் ஆகுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று கூடியது. பல்வேறு பரபரப்பான பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு தயாராக உள்ளன. இருப்பினும் அனைவரும் அமைதி காத்து, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவியது தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது. மேலும் வியாபமும் விவகாரம் சூட்டைக் கிளப்பியது. இதனால் தொடர்ந்து வெளிநடப்புகள் அரங்கேறி கூட்டமே வீணாகிப் போனது.

இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. டிசம்பர் 23ம் தேதி வரை இது நடைபெறும். ஆனால் இந்தக் கூட்டத் தொடரிலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தாத்ரி படுகொலை

தாத்ரி படுகொலை

டெல்லி அருகே தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முதியவர் இக்லாக் என்பவர் மத வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகத்தில் எழுத்தாளர் கல்பர்கி படுகொலை, சகிப்புத்தன்மை இல்லை விவகாரம், நடிகர்கள், எழுத்தாளர்கள் விருதுகளைத் திரும்பத் தரும் விவகாரம், விலைவாசி உயர்வு, சம்பளக் கமிஷன் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சபையில் எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் உள்ளன.

ஆமிர்கான் விவகாரம்

ஆமிர்கான் விவகாரம்

மேலும் லேட்டஸ்டாக நடிகர் ஆமிர்கான் மனைவி கிரண் ராவ் பேசியது தொடர்பாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்று ஆமிர்கானிடம் அவரது மனைவி கேட்டதாக கூறியது சலசலப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இதைக் கண்டித்து பாஜக உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுவும் பிரச்சினையாக்கப்படலாம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இப்படி திரும்பும் திசையெல்லாம் பிரச்சினைகள் தொக்கி நிற்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மத்திய அரசு நேற்று நடத்தியது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு தேவை

ஒத்துழைப்பு தேவை

அதில் பேசிய மோடி, ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நாட்டுநலனையொட்டி, விரைவில் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரி விதிப்பை பொறுத்தமட்டில் முக்கிய சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்படுகிற இந்த ஜி.எஸ்.டி. மசோதாவில் எதிர்க்கட்சிகளுக்கு கவலைகள், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுவார். ஒட்டுமொத்த நாடும் நம்மை நோக்கி பார்க்கிறது. நாம் அர்த்தமுள்ள விதத்தில் நமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது என்று கூறினார் மோடி.

வெங்கையா பேச்சு

வெங்கையா பேச்சு

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்புகிறது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்ட மசோதா, மாற்று முறை ஆவணச்சட்ட திருத்த மசோதா மற்றும் நடுவர் மன்ற மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.

ஒத்த கருத்து

ஒத்த கருத்து

அனைத்து கட்சி கூட்டம் சுமுகமாக நடந்தது. ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதில் கூட ஒத்த கருத்து உள்ளது. மழைக்கால கூட்டத் தொடரின்போது இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியும், தனது கவலைகள், சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட்டால், மசோதாவை ஆதரிக்க தயார் என கூறியது.

24 மசோதாக்கள்

24 மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடருக்காக 38 சட்ட நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஜி.எஸ்.டி. மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்கள் அடங்கும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அவசர சட்டம் உள்ளிட்ட 3 அவசர சட்டங்களுக்கான முறையான சட்ட மசோதாக்களும் இடம்பெறும். நில எடுப்பு சட்ட மசோதாவைப் பொறுத்தமட்டில், அது கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, 7 புதிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளன. என்றார் அவர்.

English summary
The Winter session of Parliament will begin today admids so many hot issues and may have heated debates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X