For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரிச்சலுகை முடிந்தது... எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ஒயிட்ஃபீல்ட் போகிறது விப்ரோ!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சிறப்பு பொருளாதார மண்டலத்தின் குறைந்த வரி விதிப்பு காலம் முடிந்துள்ள நிலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள விப்ரோ நிறுவனம் (இசி4) ஒயிட்ஃபீல்டுக்கு மாற்றப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் எனப்படும் எஸ்.இ.இசட். பகுதியில் உள்ளன.

Wipro to shift office from EC to Whitefield

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மாநில அரசு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இந்நிலையில் விப்ரோ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 10 ஆண்டு கால வரிச் சலுகை இந்த மாத துவக்கத்தோடு முடிந்துவிட்டது.

இதையடுத்து இனி விப்ரோ முழு வரியையும் செலுத்த வேண்டும். இதனால் நிறுவனத்திற்கு ஏகப்பட்ட செலவு ஏற்படும் என்பதால் இசி4 வளாகத்தில் உள்ள எஸ்1 மற்றும் எஸ் 2 டவர்களில் இருக்கும் அலுவலகத்தை ஒயிட்ஃபீல்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரின் ஒரு முனையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து மறுமுனையான ஒயிட்ஃபீல்டுக்கு செல்வது மிகவும் கடினம். இதனால் ஊழியர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர்.

English summary
According to reports, Wipro is shifting its EC4 office to Whitefield as its 10-year tenure of tax rebates offered by the state government has come to an end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X