For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜுன் 30வரை சர்வீஸ் சார்ஜ் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜுன் 30ஆம் தேதி வரை சர்வீஸ் சார்ஜ் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜுன் 30ஆம் தேதி வரை சர்வீஸ் சார்ஜ் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

withdrawal of service charge on online booking of train tickets has been extended to June 30

நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தப் பிறகு இந்த கட்டண வசூல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான சர்வீஸ் கட்டண விலக்கு வரும் ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

English summary
The government has decided to withdraw service charges on booking of train tickets online. The withdrawal of service charge on online booking of train tickets has been extended to June 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X