டிவி விவாதத்தில் பேச சான்ஸ் கொடுக்காத நெறியாளர்.. திடீருன்னு பெண் செய்த காரியம்.. அம்மாடியோவ்!
கொல்கத்தா: டிவி நேரலை விவாதத்தில் தான் பேசுவதற்கு நெறியாளர் வாய்ப்பு கொடுக்காததால் கடுப்பான பெண் சமூக ஆர்வலர் ஒருவர் செய்த காரியம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
ஒரு விஷயம் சரியா தவறா என்பதை அந்தந்த நிபுணர்களை வைத்து அவ்வப்போதே விவாதிக்கும் காலம் தற்போது வந்துவிட்டது. அரசியல், சினிமா, சுற்றுச்சூழல், நடிகர் - நடிகை விவாகரத்து, வனம், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட டாப்பிக்குகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு
இதற்காக அந்தந்த துறையில் வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அவர்களை அழைத்து டிவி விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இது போல் நேரலைகளில் முக்கியமானவர்கள் முதலில் பேச வாய்ப்பு வழங்கப்படும். அதற்கு பிறகு மற்வர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கம்.

அழைப்பு
இது போல் டிவி விவாதத்தில் தங்களுக்கு பேச அழைப்பு விடுக்காவிட்டால் அந்த ஷோவில் நேரலையில் உணவு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். சிலர் அவர்களாகவே பேச முன் வருவார்கள். இந்த நிலையில் கொல்கத்தாவில் பெண் ஆர்வலர் ஒருவர் நேரலையில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளிக்காததால் அவர் செய்த தீயாய் பரவி வருகிறது.

கொரோனா காலம்
சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோஷினி அலி, கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் குறைபாட்டை காரணம் காட்டி பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என வாதாடினார். இது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் பொது நல மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என வாதிட்டார்.

பட்டாசுகள்
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்படும் மாசு குறித்த விவாதத்தில் ரோஷினி அலி கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கருத்தை கூறுவதற்கு நெறியாளர் நேரம் வழங்காமல் மற்றவர்களிடம் மட்டுமே கருத்தை கேட்டதாக தெரிகிறது.

நடனமாடிய பெண் ஆர்வலர்
இதனால் உட்கார்ந்து உட்கார்ந்து பொறுமையை இழந்த ரோஷினி அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடனம் ஆடியுள்ளார். தீபாவளி முடிந்து பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு விட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது.