For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜலேகான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார்.

Woman dies after Arjuna Awardee TTE pushes her off a moving train in Maharashtra

அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். ரயில் ஸ்டேசனை விட்டு நகர்ந்த பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் தடுமாறு கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்தபோது டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

டிக்கெட் பரிசோதகரின் பெயர் பாரத் சலூங்கே என்பதாகும். இவர் மல்யுத்த விளையாட்டு வீரர் இதற்காக அர்ஜூனா விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a shocking incident, a Travelling Ticket Examiner (TTE) pushed a woman off a moving train, leading to her death, near Jalgaon in Maharashtra for boarding a AC compartment with a general ticket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X