பெங்களூரில் கணவன் கண் எதிரில் பெண் கூட்டு பலாத்காரம்.. ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது
Recommended Video

பெங்களூர்: 26 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 23 வயது ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர், மாதநாயக்கனஹள்ளி காவல் சரகத்திலுள்ள சித்தனஹொசஹள்ளி பகுதியில் வசித்து வருபவர், சித்தண்ணா மனைவி ரத்னா (26, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
ரத்னா, கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கூட்டு பலாத்காரம்
சம்பவத்தன்று, நான்கு பேர் கொண்ட கும்பல், இவரது வீட்டுக்குள் புகுந்து கணவன் சித்தண்ணாவை அடித்து போட்டு, கத்தியை காட்டி மிரட்டி ரத்னாவை கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்தபோது நால்வரும் குடி போதையில் இருந்துள்ளனர்.

போலீசில் புகார்
சித்தண்ணாவை வீட்டை விட்டு சிறிது தூரத்திற்கு கொண்டு சென்று அடித்து போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வீடு திரும்பிய சித்தண்ணா இதுகுறித்து, மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோ டிரைவர், கூட்டாளிகள் கைது
ரத்னா அளித்த புகாரில், 23 வயதாகவும் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவரும், அவரது நண்பரும் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பிடித்த ராகவேந்திரா (32), புனித் (22) மற்றும் விஜய்குமார் ஆகியோர்தான் தன்னை மாறிமாறி கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து சீண்டல்
இதில் விஜய்குமார் மட்டும் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூவரையும் காவல் துறை கைது செய்துள்ளது. விசாரணையில், வெங்கடேஷ் ரொம்ப நாளாகவே ரத்னா கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலை செய்ய செல்லும்போதெல்லாம் அவரை ஃபாலோ செய்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு ரத்னா மறுத்து வந்ததால் வீடு புகுந்து கூட்டாக பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணை
அதேநேரம், கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், பலாத்காரம் செய்தபோது, ஆட்டோ டிரைவரான சித்தண்ணா வீட்டில் இல்லை என கூறியுள்ளனர். அருகேயுள்ள பாரில் மது குடித்துவிட்டு ரத்னா வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications