India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"முதலிரவுகள்" .. "ஒத்தரோசா"வுக்கு 14 புருஷனாம்.. 15வதாக வாக்கப்பட்ட பிரசாத்.. கடைசியில் பார்த்தால்?

Google Oneindia Tamil News

போபால்: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் கல்யாண பெண்ணை காணோம்.. அவர் என்ன ஆனார் என்று குடும்பமே தேடி பிடித்து, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டது.

மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத்.. இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை.. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார்.

தனக்கு தெரிந்த நபர்களிடமும் உறவினர்களிடமும், திருமணத்துக்கு பெண் இருந்தால் சொல்லும்படி கூறியிருந்தார்..

திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!

பிரசாத்

பிரசாத்

அதன்படி, தினேஷ் என்பவர், தனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார பெண் இருப்பதாகவும், அவர் பெயர் பூஜா என்றும் சொன்னார்.. அதன்படியே ஒருநாள் பூஜாவை சந்திக்க போனார் பிரசாத்.. பூஜாவை மிகவும் பிடித்துவிட்டது.. பூஜாவுக்கும் பிரசாத்தை பிடித்துவிட்டதால், தினேஷ் ஏற்பாட்டின்படி இந்த திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது... ஊரே திரண்டு வந்து பிரசாத் தம்பதிகளை வாழ்த்தி விட்டு சென்றது.

 உடல்நிலை

உடல்நிலை

இந்நிலையில், திருமணம் முடிந்து 8 நாட்கள் ஆனது.. அப்போது திடீரென தினேஷின் மனைவிக்கு பூஜா போன் செய்து, தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும், அந்த பெண்ணும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்தார். உடல்நிலை சரியில்லை என்பதால், பிரசாத்தும் மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..

 ஸ்விட்ச் ஆப்

ஸ்விட்ச் ஆப்

அதோடு சரி.. பூஜா போனது போனதுதான்.. மறுபடியும் வீட்டுக்கு வரவேயில்லை.. கணவர் பிரசாத்துக்கும் போன் செய்யவில்லை.. தினேஷ் வீட்டுக்கு சென்ற மனைவி என்ன ஆனார் என்று பிரசாத் பூஜாவுக்கு போன் போட்டார்.. ஆனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. ஒருவேளை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கலாம் என்று நினைத்து தினேஷுக்கு போன் செய்தார்.. தினேஷ் நம்பரும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது... அப்போதுதான், பிரசாத்துக்கு சந்தேகம் எழுந்தது.

 பூஜா - பிரசாத்

பூஜா - பிரசாத்

அந்த நேரம் பார்த்து யதேச்சையாக பீரோவை திறந்தால், பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளையும் காணோம்.. தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது கடைசியில்தான் பிரசாத் உணர்ந்தார்.. உடனடியாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. பூஜா மீது புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு விசாரணையை ஆரம்பித்தனர்.. இறுதியில் பூஜாவையும் கைது செய்தனர்... ஆனால், அதற்கு பிறகுதான் எல்லாருக்கும் பெரிய ஷாக் வைத்திருந்தார் பூஜா.

கல்யாணம்

கல்யாணம்

உண்மையிலேயே அந்த பெண்ணின் பெயர் பூஜா கிடையாதாம்.. சீமா கான் என்பது நிஜமான பெயர்.. இது முதல் ஷாக்.. இப்போது பிரசாத்துடன் நடந்தது முதல் கல்யாணம் கிடையாதாம்.. 2வது கல்யாணமும் இல்லை.. 3வது கல்யாணமும் இல்லை.. 4வதும் இல்லை.. 5வதும் இல்லை.. 15வது கல்யாணமாம்.. இது 2வது ஷாக்.. 15 பேரை கல்யாணம் செய்து, 15 பேரிடமும் நகை, பணத்தை கொள்ளையடித்து ஓடிவந்துள்ளர் இந்த பெண்.. ரியா, ரெனி, சுல்லானா என்று ஒவ்வொரு கணவனிடம் ஒவ்வொரு பெயர்களுடன் நடமாடி உள்ளார்.

முதலிரவு

முதலிரவு

கல்யாணம் முடிந்து ஒருநாள்தான் அங்கு இருப்பாராம்.. முதலிரவு முடிந்ததுமே காலையிலேயே நகை, பணத்துடன் எஸ்கேப் ஆகி வந்துவிடுவாராம்.. பிரசாத்திடம் மட்டும் தான் சரியான சந்தர்ப்பம் கிடைக்காமல் ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது.. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ், இந்த பெண்ணுக்கு 35 லட்சம் ரூபாய் தருவாராம்.. இது 3வது ஷாக்.. இதையெல்லாம் கேட்டு அதிர்ரந்து போன போலீசார், இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் 8 பேர் சிக்கினர்.. 8 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

English summary
Woman get married 15 men and escaping with money and jewelery, what happened in Madhya pradesh 15 ஆண்களை திருமணம் செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X