For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அங்கேயே நில்லுங்க.. அச்சத்தில்.. கயிறு கட்டி பின்னால் நின்று மனு வாங்கும் தாசில்தார்கள்!

ஆந்திராவில் அதிகாரிகள் கயிறு கட்டி வேலை பார்த்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: பெண் தாசில்தார் விஜயா எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று தாசில்தார்கள் மனு வாங்குகிறார்கள். அச்சம் காரணமாகவே இப்படி கயிறு கட்டி மனு வாங்குவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் அவர் அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

இந்த தாலுக்கா புதிதாக உருவாக்கப்பட்டதாம். அதன் முதல் தாசில்தாரே விஜயா ரெட்டிதான். இந்த 4 வருஷமாக விஜயாதான் இங்கு தாசில்தாராக வேலை பார்த்து வந்துள்ளார்.

 வயிறு பெரிசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்! வயிறு பெரிசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்!

தனி அறை

தனி அறை

விஜயாவுக்கென தனியாக ஒரு ரூம் இருந்திருக்கிறது. அந்த அறைக்குள்தான் விவசாயி சுரேஷ் உள்ளே போய் தகராறில் ஈடுபட்டது. உள்ளே நுழையும்போதே பெட்ரோல் கேனுடன்தான் நுழைந்திருக்கிறார். அதனால், விஜயாவின் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டுதான் கொளுத்தி உள்ளார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

விஜயாவின் அலறல் சத்தம் கேட்கவும், ஊழியர்களால் கதவை திறக்க முடியவில்லை. அதனால் உடைத்து கொண்டுதான் உள்ளே போய் பார்த்துள்ளனர்.. அதற்குள் முழுசுமாக எரிந்து போய் இருந்தார் விஜயா ரெட்டி. இந்த சம்பவம் தெலுங்கானா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உள்ளூர் மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

கர்னூல்

கர்னூல்

ஒரு தாசில்தாருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் பெரிய அளவில் உறுத்தலாக உள்ளது. இதனால் ஒருவித அச்சமும் தெலுங்கானா அதிகாரிகளிடம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பாதிப்பு கர்னூல் தாசில்தார் ஆபீஸ்வரை பரவி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார் உமா மகேஸ்வரி என்பவர். இவரை சந்தித்து கிராம மக்கள் வழக்கமாக மனு தந்து வருகிறார்கள்.

அச்சம்

அச்சம்

ஆனால், இப்போது அவரது அறையில் ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது. அந்த கயிற்றின் பின்னால் இருந்துதான் மக்களை சந்திக்கிறார் உமா மகேஸ்வரி.. கயிற்றுக்கு அந்த பக்கம் இருந்துதான் அவர்களின் மனுவை வாங்குகிறார்.. பாதுகாப்பான தூரத்திலிருந்து மனுவை ஒப்படைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் அச்சம் அடைந்து உள்ளேன்" என உமாமகேஸ்வரி கலக்கத்துடன் தெரிவிக்கிறார்.

English summary
woman officer puts up rope barricade inside office in andhra after Telangana officer vijaya set ablaze
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X