For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவரல்லவோ தலைவி.. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த ஜேசிபி.. தொங்கி பிடித்தபடி போராடிய பெண்!

ஜேசிபி இயந்திரத்தில் தொங்கி பெண் போராட்டம் செய்த வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஜேசிபி இயந்திரத்தை பிடித்தபடி அந்தரத்தில் தொங்கி போராட்டம் நடத்தி உள்ளார் ஊராட்சி பெண் தலைவர் ஒருவர்! ராஜஸ்தான்.மாநிலம் ஜாலூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள மண்டவாலா என்ற ஊரில் வசித்து வருபவர் ரேகா தேவி.. இவர் அங்குள்ள ஊராட்சி பெண் தலைவராக உள்ளார். இன்று, அந்த ஊர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு ஜேசிபி இயந்திரம் ஊருக்குள் வந்திருந்தது. ஆனால் இதை பார்த்த அந்த பெண், ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தார்.

 woman protest and tries to climb a jcb machine in gujarat

இதற்காக அந்த ஜேசிபி இயந்திரத்தை ஊருக்குள் வரும்போதே தடுத்து நிறுத்தினார். ஆனால், டிரைவர் ஜேசிபியை ஓட்டிக் கொண்டே வந்தார். இதை பார்த்ததும் கொதித்து போன ரேகா தேவி, ஓடிச்சென்று இயந்திரத்தின் பின்பக்கத்தை எகிறி பிடித்து இறுக்கப் பற்றிக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ந்த டிரைவர், வண்டியை ஒரு செகண்ட் நிறுத்திவிட்டார். அப்போதும் அந்த பெண் ஜேசிபியை விடாமல் பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியே இருந்தார். இதை சுற்றி நின்றிருந்த ஏராளமான ஆண்களும் பார்த்து கொண்டே இருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை இப்போதைக்கு அகற்ற அந்த பெண் வழிவிடுவதாக தெரியவில்லை என்பதை ஒருகட்டத்தில், உணர்ந்த ஜேசிபி டிரைவர், வண்டியை அப்படியே பின்பக்கமாக ஓட்டி சென்றார். இதற்கு பிறகுதான் அந்த பெண் ஜேசிபி இயந்திரத்தை விட்டு கீழே இறங்கினார். ஊராட்சி தலைவரான இந்த பெண் ஜேசிபி இயந்திரத்தைபிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கும் இந்த துணிச்சலான காட்சிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது

English summary
woman who sarpanch of Mandawala village tries to climb a JCB machine in an attempt to stop anti-encroachment drive
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X