For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் ரூ .35 லட்சம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா.

இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்

கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடைகேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடை

 பாசா சட்டம்

பாசா சட்டம்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட கெனல் ஷாவை அழைத்து ஸ்வேதா ஜடேஜா விசாரித்துள்ளார். அப்போது அவர் மீது சமூக நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் (பாசா) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.35 லட்சம் தருமாறு லஞ்சம் கேட்டிருக்கிறார்.

35 லட்சம் லஞ்சம்

35 லட்சம் லஞ்சம்

கெனல் ஷாவின் சகோதரர் பவேஷிடமிருந்து ஸ்வேதா ஜடேஜா இந்த ரூ .35 லட்சம் லஞ்சத்தை கேட்டிருக்கிறார். முன்னதாக பவேஷிக்கு எதிராகவும் 2019 ல் பதிவு செய்யப்பட்ட ஒரு பலாத்கார வழக்கை விசாரித்து வருகிறார். இதனால் தங்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க முதற்கட்டமாக ரூ .20 லட்சம் தர இருவரும் ஒப்புக் கொண்டார்கள்.

பெண் எஸ்ஐ கைது

பெண் எஸ்ஐ கைது

இதையடுத்து ஸ்வேதா ஜடேஜா ஒரு இடைத்தரகர் மூலம் ரூ .20 லட்சத்தை வாங்கி கொண்டிருக்கிறார். அத்துடன் பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க ரூ .15 லட்சம் கூடுதலாக தருமாறு கோரியிருக்கிறார். இது தொடர்பான புகாரையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஸ்வேதா ஜடேஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏழு நாள் காவல்

ஏழு நாள் காவல்

குஜராத் போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்வேதா ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதும், அதை இடைத்தரகர் மூலம் வாங்கியதும் உறுதியானது. இதையடுத்து சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை ஏழு நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள அண்ணன் தம்பி இருவரும் ரூ .20 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

English summary
Gujarat: A woman police sub-inspector (PSI) in Ahmedabad has been arrested for allegedly accepting a bribe of Rs 35 lakh from a rape accused
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X