For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலம் விற்று கிடைத்த ரூ.55 லட்சமும் செல்லாத பணமா போயிருமோ... அதிர்ச்சியில் தெலுங்கானா பெண் தற்கொலை

500,1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மெகபூபாபாத்: தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் வினோதா என்பதாகும். இந்த பெண் மெகபூபாபாத் மாவட்டம் சனிகாபூரை சேர்ந்தவர். 55 வயதாகும் வினோதா தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாயை வைத்திருந்தார்.

பணம் அனைத்தும் 500 ரூபாய், 1000 ரூபாய் பண்டல்களாக இருந்தது. கணவனும், மனைவியும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கவே வினோதா அதிர்ச்சிடையந்தார். பணம் முழுவதும் செல்லாமல் போய்விட்டதே என்று அலறினார்.

woman suicide after knowing cancellation of bigger notes

வினோதாவிற்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். நிலம் விற்ற பணத்தை பங்கு பிரித்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 1000 மற்றும் 5000 ரூபாய் பணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார் மோடி.

இதைக் கேள்விப்பட்ட உடன் குழப்பத்தில் இருந்த பெண், பணத்தை மாற்றுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தார். அதே யோசனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள வினோதாவின் கணவர், பணத்தை வீட்டில் வைத்திருந்தது தவறாகிவிட்டது.

woman suicide after knowing cancellation of bigger notes

பணம் செல்லாமல் போய்விட்டதாக டிவியில் பார்த்து மகன் கூறியதால் அதிர்ச்சியில் அந்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தெரிவித்தார்.

woman suicide after knowing cancellation of bigger notes

அதே நேரத்தில் மொத்த பணத்தையும் குழந்தைகள் பங்கு கேட்டதால் வினோதா தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. பணத்தை எப்படி மாற்றுவது என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலே தற்கொலை செய்து கொண்டார் வினோதா. இந்த சம்பவம் சனிகாபூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Shocked with the government's move of banning Rs 500 and Rs 1,000 notes, a woman in Telangana committed suicide. The woman's family claims that she was disturbed after demonetization of high value notes and assumed that all her money had no value anymore. Police Sources said Vinoda Fifty-five-year-old lady committed suicide due to confusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X