For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!

தாசில்தார் கொலை செய்யப்பட்டதில் ஊழியர்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி ... தீ வைத்து எரித்த விவசாயி

    அப்துல்லாபூப்ரமெட், ரங்காரெட்டி, தெலங்கானா: "வந்தார்.. வாக்குவாதம் செய்தார்.. .திடீரென கையில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து விட்டார். எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து விட்டது" என்று வேதனையுடன் கூறுகிறார்கள், பெண் தாசில்தார் விஜயா ரெட்டி பணியாற்றி வந்த அலுவலகத்தின் ஊழியர்கள்.

    தெலுங்கானா மாநிலமே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்து போயுள்ளது. இப்படி ஒரு பெண் தாசில்தாரை ஈவு இரக்கமே இல்லாமல், உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் தெலங்கானா மக்களை மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களையும் கூட வெகுவாக பாதித்துள்ளது.

    அரசு ஊழியர்கள் அங்கு கொந்தளித்துப் போயுள்ளனர். இப்படி ஒரு பாதுகாப்பில்லாத சூழலில் எப்படி நாங்கள் பணியாற்ற முடியும். அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் கொதித்துப் போய் கூறுகின்றனர். இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊழியர்கள் சிலர் கூறியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பெண்ணின் அழகில் மயங்கி.. 5 கிமீ விடாமல் ஃபாலோ செய்து.. சில்மிஷமும் செய்து சிக்கிய நபர்!பெண்ணின் அழகில் மயங்கி.. 5 கிமீ விடாமல் ஃபாலோ செய்து.. சில்மிஷமும் செய்து சிக்கிய நபர்!

     மின்னல் வேகத்தில்

    மின்னல் வேகத்தில்

    இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், மின்னல் வேகத்தில் எல்லாமே நடந்து போச்சுங்க. விஜயா ரெட்டியை காப்பாற்றுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. தாக்குதலைத் தடுக்கக் கூட எங்களால் முடியவில்லை. அனேகமாக அந்த நபர் பெட்ரோல் ஊற்றித்தான் தீவைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

     சாம்பலாக்கி விட்டது

    சாம்பலாக்கி விட்டது

    காரணம் விஜயா ரெட்டியின் உடலில் பற்றிய தீ வேகமாக பரவி அவரை சாம்பலாக்கி விட்டது. மண்ணெண்ணெய்யால் இவ்வளவு வேகமாக எரிய முடியாது. மொத்தமே 3 நிமிடம்தான். துடிக்க துடிக்க எரிந்து போய் விட்டார் விஜயா ரெட்டி என்றனர் அவர்கள்.

     சாப்பிடவே இல்லை பாவம்

    சாப்பிடவே இல்லை பாவம்

    அந்த அலுவலகத்தின் சீனியர் அசிஸ்டென்ட் சுனிதா கூறுகையில், "கோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு தொடர்பாக போயிருந்த விஜயா ரெட்டி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனது அலுவலகம் வந்துள்ளார். அன்று குறை தீர்ப்பு நாள் என்பதால் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அன்று மதிய உணவு கூட சாப்பிடவில்லை. அத்தனை கடுமையான வேலைப்பளுவில் இருந்துள்ளார்.

     மக்களுக்கு முக்கியத்துவம்

    மக்களுக்கு முக்கியத்துவம்

    அவரது அறைக்கு வெளியே ஏராளமான பேர் காத்திருந்த காரணத்தால் பிறகு சாப்பிட்டுக்கலாம் என்று கூறி விட்டு விட்டார். தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை நான் அவருடன்தான் இருந்தேன். சில மனுக்களை என்னிடம் கொடுத்து இதை பார்க்குமாறு கூறி அனுப்பிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்து விட்டது.

    குரல்

    குரல்

    நான் அறையை விட்டு வெளியே வந்து முதல் மாடியில் இருந்த எனது அறைக்குப் போனேன். எனது அறைக்குப் போயிருக்கக் கூட இல்லை. அதற்குள் சத்தம் கேட்டது. மேடத்தின் குரல் கேட்டு வேகமாக வந்து பார்த்தபோது அந்த இடமே புகையால் சூழப்பட்டிருந்தது. ஏதோ தீவிபத்தாக இருக்கலாம் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். பிறகுதான் நடந்ததை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன்" என்றார் சுனிதா..

    இன்னும் கூட விஜயா ரெட்டியின் அலுவலகத்தில் பணியாற்றுவோர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல்தான் உள்ளனராம்.

    English summary
    revenue official vijaya reddy burnt alive case issue by angry land owner in telangana
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X