For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரள அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Women activists won't be allowed inside Sabarimala: Kerala government

இந்நிலையில் அடுத்த மாதம் பிரபல பெண்ணியவாதி, திருப்தி தேசாய், 100 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளது. அதில் தீர்ப்பு வரும்வரை கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை" என கூறப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவாதங்களால்தான், அசம்பாவிதங்கள் நடப்பதாகவும், அக்கோயிலில் இரு நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர் என்ற ஒரு பேச்சும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Kerala government on Monday said that the entry of Bhumata Brigade chief Trupti Desai will not be allowed in the Lord Ayyappa temple here, even as the activist plans to lead 100 odd women to the famous hill shrine in Sabarimala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X