For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்!

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள்தான் அதிக அளவில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

கவுகாத்தி: இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள்தான் அதிக அளவில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும்.

இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் அகதிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவார்கள். இதனால் வடகிழக்கு மாநிலத்தின் தோற்றமே மாறும். அங்கு அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் நடக்கும். அதேபோல் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

குடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்புகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு

என்ன போராட்டம்

என்ன போராட்டம்

இந்த போராட்டம் நான்கு நாட்களை கடந்து நடந்து வருகிறது. இதற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பெண்கள்தான் அதிக அளவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கவுகாத்தி ஐஐடியில் தமிழக மாணவிகள் உட்பட பிற மாநில மாணவிகள், அசாமின் பூர்வகுடி மாணவிகள்தான் போராட்டத்தை அதிகம் முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். ஆண்களை விட பெண்களின் முகம்தான் போரட்டத்தில் அதிகம் காணப்படுகிறது.

பெண்கள்

பெண்கள்

ஒரு கையில் தீ பந்தம், மறு கையில் இசைக்கருவி, உதட்டில் விடுதலை பாடல் என்று இந்த பெண்களின் போராட்டம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மிக முக்கியமாக அசாமி மொழியில் தான் இவர்கள் பாடி வருகிறார்கள். அசாமியில் விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் இவர்கள் பாடி வருகிறார்கள்.அதே போல் அசாம் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகவும் இவர்கள் போராடி வருகிறார்கள்.

மெரினா போராட்டம்

மெரினா போராட்டம்

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிலர் கெட்ட வார்த்தையில் அரசியல் தலைவர்களை திட்டியது போல இங்கும் மக்கள் கோபத்தில் சில வசனங்களை பேசி வருகிறார்கள். மோடி, அமித் ஷாவின் பொம்மைகளை செய்து அதை தீ இட்டு கொளுத்தியும் போராடி வருகிறார்கள்.

அனைத்து வயது பெண்கள்

அனைத்து வயது பெண்கள்

மிக முக்கியமாக அனைத்து வயது பெண்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 95 வயது நிரம்பிய மூதாட்டிகள் சிலர் போராடி வருகிறார்கள். சிறுமிகள் பலர் கொண்டாட்டமாக போராட்டம் செய்து வருகிறார்கள். பல மாணவ அமைப்பை சேர்ந்த பெண் மாணவிகள் தலையில் துணியை கட்டிக்கொண்டு கெத்தாக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

என்ன இயக்கம்

என்ன இயக்கம்

இந்த போராட்டம் மொத்தமாக ஒரு இயக்கம் போல மாறி இருக்கிறது. மெரினா போராட்டத்தை விட இது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கையில் எடுத்த எந்த காரியமும் தோல்வி அடைந்தது இல்லை. மமதா தொடங்கிய ஒரு போராட்டம்தான் அவரை முதல்வராக்கியது. அதேபோல் இந்த போராட்டம் அசாமில் என்ன மாற்றத்தை கொண்டு வரும், எத்தனை பெண் தலைவர்களை உருவாக்கும் என்று பார்க்கலாம்.

English summary
Women are leading the whole protest against Citizenship Amendment in Assam at many places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X