For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடா நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஆந்திரப் பெண்கள்.. பரபரப்புத் தகவல்கள்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு வீட்டு வேலைக்காக ஆந்திராவில் இருந்து சென்ற பெண்கள் பலர் பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடவடிக்கை தேவை...

நடவடிக்கை தேவை...

மேலும், இது குறித்து ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி கூறுகையில், "அந்தப் பெண்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மீட்டு உடனடியாக நாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சுமூக முடிவு...

சுமூக முடிவு...

சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் பேசி இந்த விவகாரத்தை விரைவில் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இந்தியத் தொழிலாளர்கள்...

இந்தியத் தொழிலாளர்கள்...

பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளரக்ள் இருப்பதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பல பெண்களும் அடக்கம்.

கொடுமைகள்...

கொடுமைகள்...

தங்களது குடும்பத்தைப் பிரிந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வீட்டு வேலை செய்ய வரும் இவர்களில் பலரும் ஏஜென்டுகளாலும், வேலையில் சேரும் இடத்தில் உள்ல முதலாளிகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர்.

பெண்கள் விற்பனை...

பெண்கள் விற்பனை...

ரெட்டி தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், "ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்களும் கூட பெருமளவில் இதுபோல ஏமாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை விற்பது போல விற்பனை செய்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணயம்...

விலை நிர்ணயம்...

சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறதாம். பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளனராம். இவர்களை தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.

அமைச்சர்கள் குழு...

அமைச்சர்கள் குழு...

சமீபத்தில் வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட 25 பெண்கள் அரசிடம் உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஆந்திர மாநில அமைச்சர்கள் குழு சவுதி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Women domestic workers from Andhra Pradesh are languishing in jails in Gulf states after attempting to flee abusive employers or overstaying their visas, said an Andhra Pradesh minister, urging the union government to help them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X