For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பி. யில் தொடரும் சாபம்... 400 ஆண்டுகளாக பிரசவமே நடக்காத சங்கா ஷியாம் ஜி கிராமம்

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த 400 வருடமாக குழந்தைகளே பிறக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்

    போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த 400 வருடமாக குழந்தைகளே பிறக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்திற்கு சாபம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள சங்கா ஷியாம் ஜி என்ற கிராமத்தில்தான் இந்த பிரச்சனை இருக்கிறது. அதையும் மீறி பெண்கள் குழந்தை பெற்றெடுக்க விரும்பினால் அவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

    இந்த பழக்கம் சுமார் 400 ஆண்டுகளாக அங்கு வாழும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்போதும் கூட இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது.

    இதுதான் வழக்கம்

    இதுதான் வழக்கம்

    வெளியே சென்று குழந்தை பெற்றுக்கொள்வதுதான் அங்கு நடைமுறையாக இருக்கிறது. அப்படியே நடைமுறையை மீறி குழந்தையை பெற்றெடுத்தால் விபரீத நிகழ்வுகள் நடைபெறும் என்று சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னால் விதியை மீறி பெற்றெடுத்த பெண்கள் சீக்கிரமே மரணம் அடைவதும் அல்லது அவர்களது குழந்தை உடல் ஊனமுற்று பிறந்தும் இருக்கின்றது.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    16 ஆம் நூற்றாண்டில் கோவில் ஒன்று தெய்வங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்டிய பொழுது, பெண் ஒருவர் கோதுமை அரைத்து கொண்டு இருந்ததாகவும் அது அந்த கடவுள்களுக்கு இடையூறாகவும் இருந்துள்ளது. இதனால் கடவுள்கள், கோபத்தில் இந்த கிராம பெண்களுக்கு குழந்தை பிறக்க கூடாது என்று சாபம் விடப்பட்டதாகவும் இங்கு வசிக்கும் மக்களால் சொல்லப்படுகிறது.

    எல்லை

    எல்லை

    இந்த கிராமத்தின் ஊராட்சி மற்ற தலைவரான நரேந்திர குர்ஜர் குறிப்பிடுகையில், 90 சதவீத குழந்தை பிரசவம் அருகில் இருக்கும் கிராம மருத்துவமனையிலே நடைபெறுவதாவும், அவரச தேவைக்கு பெண்ணை கிராம எல்லைக்கு கொண்டு போய் பிரசவம் பார்ப்போம் எனவும் கூறியுள்ளார். இந்த பழக்கம் முன்பு விடப்பட்ட சாபத்தினால் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    அறை

    அறை

    சாபம் விடப்பட்ட கிராமம் என்பதால் இன்று வரை இங்கு வசிக்கும் பெண்கள் குழந்தைகளை இந்த கிராமத்தில் பெற்றெடுப்பதில்லை. அப்படியே ஏதாயினும் அவசர சூழ்நிலை வரும் பொழுது அவர்கள் கிராம எல்லையில் ஓர் சிறிய அறையில் தான் குழந்தையை பெற்றெடுப்பார்களாம். இந்த அறை இதற்கு என்றே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Women gave no birth to a baby in last 400 years in a village of Madhya Pradesh named Sanka Shyam Ji.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X