For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ஜாக்கெட்டில் ஜன்னல், கதவுனு கிண்டல் பண்ணாதீங்க.. பெண்களுக்கு எப்போதும் சமூக அக்கறை உண்டு பாஸ்!

Google Oneindia Tamil News

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவுக்காக பெண்கள் தங்கள் முதுகுகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை டேட்டூவாக வரைந்துள்ளனர்.

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. தென்னிந்தியாவை காட்டிலும் வடஇந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Women pose with body paint tattoos for Navratri

அந்த வகையில் சூரத்தில் நேற்றைய தினம் நவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது பெண்கள் தங்கள் முதுகுகளில் இந்திய விண்வெளி துறையின் சாதனை திட்டமான சந்திரயான் 2வை வரைந்திருந்தனர்.

இன்னும் சில பெண்களோ சமூக அக்கறை கொண்டு போக்குவரத்து விதிகளை மதிக்குமாறு வரைந்திருந்தார். மேலும் ஜம்மு- காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கிவிட்டு இந்தியாவுடன் இணைத்ததை வரவேற்கும் விதமாக வரைந்திருந்தார்.

பொதுவாக பெண்கள் தங்கள் ஜாக்கெட்டுகளின் பின்புறத்தில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகளை தைத்து போட்டுக் கொள்வது வழக்கம். இதை நிறைய ஆண்கள் கிண்டல் செய்வார். ஆனால் தங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு என்பதை பிரதிபலிக்கும் வகையில் டேட்டூக்களை வரைந்துள்ளனர்.

English summary
Surat(Gujarat): Women pose with body paint tattoos during preparations for Navratri and Raas Garba, yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X