For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மற்றவர்கள் மூச்சை காப்பாற்றினார்.. தன் உயிரை விட்டார்.. ஸ்வாதியின் பரிதாப முடிவு

தீ விபத்தில் பலரை காப்பாற்றிய பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: துணிச்சலான.. தைரியமான.. இளகிய மனம் உடைய பெண்தான்... ஆனால் காப்பாற்ற யாருமே இன்றி அநியாயமாக உயிரை விட்டது நெஞ்சை பிசைந்து நிற்கிறது.

டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70-வது செக்டரில் துலிப் ஆரஞ்ச் என்ற ஒரு பெரிய அபார்ட்மெண்ட் இருக்கிறது. மொத்தம் 9 தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 4 வீடுகள் உள்ளன.

[ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க!]

 4 வயது மகள்

4 வயது மகள்

இங்கு 5-வது மாடியில் குடியிருப்பவர் பெயர் ஸ்வாதி. 34 வயதுடைய ஸ்வாதி, கட்டிட வடிவமைப்பாளர் (இன்டீரியர் டிசைனர்) வேலை பார்க்கிறார். தனது கணவன் மற்றும் 4 வயது மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார்.

 தீ பிடித்தது

தீ பிடித்தது

கடந்த ஞாயிறு அன்று நடுராத்திரி 2 மணி இருக்கும். முதல் மாடியில் திடீரென்று தீப்பிடித்தது. காரணம், அங்கு வைக்கப்பட்டிருந்து கரண்ட் பாக்சில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் பக்கத்திலிருந்த பொருட்கள் குபீர் என்று பற்றிக் கொண்டு எரிந்தன.

 ஆஸ்துமா பிரச்சனை

ஆஸ்துமா பிரச்சனை

அந்த நேரம் பார்த்து 5-வது மாடியில் தூங்கி கொண்டிருந்த ஸ்வாதிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அதனால் தண்ணீர் குடிக்க எழுந்து வந்தபோது எங்கேயோ கருகிய வாடை வந்தது. ஏற்கனவே ஸ்வாதிக்கு ஆஸ்துமா பிரச்சனையும் உள்ளது. பிறகு வாசற் கதவை திறந்து பார்த்தால், புகை வாசம் மூக்கை துளைத்ததுடன், தீ பரபரவென பரவிக் கொண்டிருந்தது.

 எல்லோரையும் எழுப்பினார்

எல்லோரையும் எழுப்பினார்

இதனால் பதட்டமும், அதிர்ச்சியும் அடைந்த ஸ்வாதி, தூங்கிக் கொண்டிருந்த தன் கணவரையும் மகளையும் அவசர அவசரமாக எழுப்பிவிட்டு, உடனே கீழே இற்ங்கி போய்விடுமாறு கூறினார். அதன்படியே கணவரும், குழந்தையை தூக்கிக் கொண்டு இறங்கினார். ஆனால் ஸ்வாதி, இறங்கவில்லை. மற்ற தளங்களில் உள்ள வீட்டு கதவுகளை தட்ட தொடங்கினார். தூங்கிக் கொண்டிருந்த எல்லோரையும் எழுப்பினார்.

 கதவுகளை தட்டினார்

கதவுகளை தட்டினார்

எல்லா தளங்களுக்கும் ஓடி ஓடி சென்று வீட்டு கதவுகளை தட்டி தீ ரொம்ப வேகமாக பத்திக்கிட்டு வருது, எல்லோரும் கீழே இறங்கி தப்பிச்சு ஓடுங்க என்று கத்தி கொண்டே இருந்தார். இதையடுத்து எல்லோருமே பதறியடித்து கொண்டு இறங்கி கீழே ஓடினார்கள். அப்போது தீ விபத்தால் கரண்டும் போய்விட்டது. எல்லோருமே தட்டுத்தடுமாறி தப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அப்போது மணி 2.30 ஆகிவிட்டது. அந்த நேரத்தில் ஸ்வாதி 10-வது மாடியில் இருந்தார்.

 மூச்சு திணறல்

மூச்சு திணறல்

10-தளங்கள் இறங்கி கீழே போவதைவிட பேசாமல் மொட்டை மாடிக்கு போய்விடலாம் என்று நினைத்து அங்கே ஓடினார். பார்த்தால், மொட்டை மாடி கதவு பூட்டப்பட்டு இருந்தது. 3.15 மணிக்கு தீயணைப்பு துறையினர் வந்துவிட்டனர். தப்பவிருந்த அனைவரையுமே பத்திரமாக மீட்டனர். யாராவது தளங்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்களா என்று பார்த்தனர். கடைசியாக மொட்டை மாடிக்கு ஓடினார்கள். அங்கே பூட்டப்பட்ட கதவு அருகில் ஸ்வாதி மயங்கி விழுந்து கிடந்தார்.

 கரண்ட் இல்லை

கரண்ட் இல்லை

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் ஸ்வாதி மொட்டை மாடி கதவருகே விழும்போதே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். கரண்ட் போய்விட்டதால், இருட்டில் யார் யார் எங்கே தப்பி இருக்கிறார்கள் என்று தெரியாமல் போய்விட்டது. இதனால் ஸ்வாதியும் எங்காவது இருப்பார் என்றுதான் அவரது குடும்பத்தினர் உட்பட தப்பி வந்த எல்லோருமே நினைத்தார்கள்.

 உலுக்கிய மரணம்

உலுக்கிய மரணம்

இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்கள் சொல்லும்போது, எல்லா படிக்கட்டுகளிலும் தீப்பிடித்துவிட்டதால் ஸ்வாதியால் இறங்கவும் முடியவில்லை, கதவு பூட்டியிருந்ததால் மொட்டை மாடிக்கும் செல்ல முடியவில்லை என்றனர். எல்லோரையுமே ஓடி ஓடி காப்பாற்றிய ஸ்வாதியின் மரணம் எல்லோரையுமே ரொம்பவே உலுக்கி போட்டுவிட்டது.

English summary
Women saves many before suffocating to death in Gurugram Apartment fire accident
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X