For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து என்ற வார்த்தை வேதங்களில் இல்லை, அதை முஸ்லிம்களே கண்டுபிடித்தனர்: சர்ச்சையில் வீரப்ப மொய்லி

By Siva
Google Oneindia Tamil News

Word 'Hindu' never existed in Vedas, Upanishads; Muslims invented it: Veerappa Moily
பெங்களூர்: இந்து என்ற வார்த்தை வேதங்களிலும், உபநிடதங்களிலும் இல்லை அதை இடைக்காலத்தில் முஸ்லிம்கள் தான் அறிமுகப்படுத்தினர் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

இந்து என்ற வார்த்தை வேதங்களிலும், உபநிடதங்களிலும் இல்லை. அதை இடைக்காலத்தில் முஸ்லிம்கள் தான் அறிமுகப்படுத்தினர். சாதி முறையை எதிர்த்து முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது இந்தியர்கள் தான். இருப்பினும் நாட்டில் சாதிகள் உள்ளன. சாதி முறையை ஒழிக்க புதிய சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும் என்றார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறுகையில், பழங்காலம் மற்றும் இடைக்கால பிரச்சனைகளை எல்லாம் தற்போது மொய்லி எழுப்பக் கடாது என்றார். மொய்லியின் கருத்துக்கு ஸ்ரீராம சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
Former central minister Veerappa Moily told that the word 'Hindu' was introduced by Muslims in the medieval age and that it has no mention in Vedas and Upanishads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X