For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் அபார வெற்றி.. சர்வதேச ஊடகங்கள் புகழாரம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 30 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் சர்வதேச நாடுகளின் ஊடகங்களும் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தங்களுக்கே உரித்தான பாணியில் பதிவும் செய்துள்ளனர்.

இதில் சில ஊடகங்களின் பார்வை மட்டும்...

பிபிசி நியூஸ்

பிபிசி நியூஸ்

லோக்சபா தேர்தல் முடிவுகளை விரிவாக பதிவு செய்த பிபிசி செய்தி நிறுவனம், காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறது என்று பதிவு செய்துள்ளது.

தி டெய்லி ஸ்டார்

தி டெய்லி ஸ்டார்

இந்திய தேர்தலில் மோடி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் காந்தி குடும்பத்தினர் தலைமையேற்றிருந்த காங்கிரஸ் கட்சியோ இதுவரை இல்லாத மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் 67 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது என்றும் பதிவு செய்துள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ்

தி நியூயார்க் டைம்ஸ்

இதன் தலைப்புச் செய்தியில், காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது! இந்தியா மோடி பக்கம்! என்று கூறியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட்

ஹிந்து தேசியவாத தலைவர் நரேந்திர மோடி இந்திய தேர்தலில் வென்றுள்ளார் என்று இந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரை

ஆய்வுக் கட்டுரை

வாஷிங்டன் போஸ்ட்-ன் ஒப்பீனியன்ஸ் பகுதியில் இனி இந்தியா மற்றும் மோடி மீதான அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் எத்தகைய மாற்றம் தேவை என விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

English summary
As the Bharatiya Janata Party and its allies surge towards a record win in the 16th Lok Sabha elections, the foreign media joins others in congratulating Narendra Modi, who led NDA's poll campaign. BBC News, which has been covering the Indian elections extensively, writes, "Congress admits India poll defeat". The Daily Star/Reuters writes, "Modi wins landslide victory in Indian election". Further in the article, it says "The United Progressive Alliance led by the Gandhi family's Congress party, which has ruled India for the last decade, was leading in just 67 seats - its worst-ever showing".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X