For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் என்றால் அமைதி மட்டுமல்ல .."டெர்ரரும்" உண்டு பாஸ்.. டெர்ரரும் உண்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் என்றாலே தியாகம், அன்பு, போற்றுதலுக்குரியவர்கள் என எல்லாரும் கொண்டாடிக் கொண்டிருக்க, பெண் இனத்திற்கே அவமானம் ஏற்படுத்தும் வகையில் கோடூர மனம் கொண்ட பெண்கள் உலகத்தில் உண்டு.

இதோ அப்படியான சில பெண் தீவிரவாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

world's deadliest women terrorists

பிளாக் விடோஸ்;

ரஷ்யாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகளை பிளாக் விடோஸ் என்று அழைப்பார்கள். கடந்த 2002ம் ஆண்டு மாஸ்கோவில் தியேட்டர் தாக்குதலின் போது தான் இவர்கள் பற்றி உலகத்திற்கு தெரிய வந்தது. மனித வெடிகுண்டுகளாக மாறி இவர்கள் பெரும்பாலும் தற்கொலைப் படைத்தாக்குதல் தான் நடத்துவார்கள்.

சிறுமிகளும் உண்டு...

கருப்பு விதவைகள் எனப் பொருள் படும் படி அழைக்கப்பட்டாலும், இவர்களில் அனைவருமே கணவரை இழந்தவர்கள் அல்ல. இந்தக் குரூப்பில் உள்ள பலருக்கு 15 முதல் 19 வயதிற்குள்ளாகத் தான் இருக்கும்.

மூளைச்சலவை...

இந்தப் பெண் தீவிரவாதிகள் பெரும்பாலானோர் நன்றாக படித்தவர்கள். மற்ற தீவிரவாதிகளின் மூளைச் சலவையால் தீவிரவாதிகளாக மாறியவர்கள் இவர்கள்.

வெள்ளை விதவை...

சுமார் 400 பேர் இறப்புக்கு காரணமானவர் வெள்ளை விதவை எனக் குறிப்பிடப்படும் பெண் தீவிரவாதி சமந்தா லெத்வைதே. இவர், சோமாலியா மற்றும் கென்யா வில் பல்வேறு வகை பயங்கர வாத தாக்குதல்களுக்கு உத்தர விட்டவர் என கூறப்படுகிறது.

சுட்டுக் கொலை...

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சமந்தா, உலகிலேயே மிகப்பெரிய, அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறித்தது.

புசாகோ...

ஜப்பானைச் சேர்ந்த இவர், கடந்த 80களில் அமெரிக்க ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் குரூப்பில் இணைந்து செயல்பட்டார். இவர் தற்போதும் சிரியாவில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேட்டி ஹியர்ஸ்ட்...

அமெரிக்க மீடியா ஜாம்பவான் ரான்டால்ப் ஹியர்ஸ்ட்டின் செல்லமகள் பேட்டி. இவரது கதை வித்தியாசமானது. இவரை சியாம்போனீஸ் விடுதலைப்படை என்ற கலகக்காரர்கள் குழு கடத்திச் சென்றது. மகளை மீட்க 60 லட்சம் டாலர் பணம் கொடுத்தார் ரான்டால்ப். ஆனால் பேட்டியை அவர்கள் விடவில்லை. கடைசியில் அந்தத் புரட்சிப் படையில் இணைந்து விட்டதாக அடுத்த நாள் செய்தி வந்தது. பின்னர் அவர் இயக்கத்திற்காக பணம் சேர்க்க கொள்ளைக்காரியாகவும் மாறினார். 1974ல் இவர் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டார்.

பொது மன்னிப்பு...

இந்தக் குழுவின் தலைவர்களுக்கு எதிராக அரசுப்படையினர் நடத்திய தாக்குதலின்போது அமுக்கியத்தலைவர்கள் கொல்லப்பட பேட்டி உயிருடன் பிடிபட்டார். விசாரணையின்போது தன்னை பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி அனைத்தையும் செய்ய வைத்ததாக அவர் கூறினார். தான் மூளைச் சலவை செய்யப்பட்டதாகவும் கூறினார். அதிபர் ஜிம்மி கார்ட்டர் 2 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

உல்ரிக் மெய்னாப்...

இவர் ஒரு மிகப் பெரிய தீவிரவாதி. ஆர்ஏஎப் எனப்படும் தீவிரவாதஅமைப்பை உருவாக்கியவர் இவர். தனது தோழர்கள் இருவருடன் சேர்ந்து இதை உல்ரிக் உருவாக்கினார். இவரது குழுவுக்கு பாடர் மெய்னாப் குழு என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஜெர்மனி முழுவதும் இவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தற்கொலை...

பிராங்க்பர்ட்டில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தையும் தாக்கினர். நீதிபதி புட்டன்பர்க் என்பவரின் காரில் குண்டு வைத்தனர். 1972ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையிலேயே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார் உல்ரிக்.

ரீம் ரியாஷி...

இஸ்ரேலைச் சேர்ந்தவர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர். இஸ்ரேல் மற்றும் காஸா இடையிலான எரஸ் சோதனைச்சாவடியில் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியவர் இவர்.

English summary
Little do we know that the world of terrorism and jihad is not solely dominated by men. On this women's Day, while we celebrate the spirit of women, we also explore the darker side of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X