For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‛‛உள்ளாடை’’ அணியுங்க.. இல்லாவிட்டால் நடவடிக்கை.. பாகிஸ்தான் விமான பணியாளர்களுக்கு ‛அட்வைஸ்’

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான பெண் மற்றும் ஆண் பணியாளர்களுக்கு ஒரு அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது. சரியாக உள்ளாடைகள் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகள் பாகிஸ்தான் அரசின் விமான போக்குவரத்து துறை செயலாளரின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு இந்த விமானங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

 இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா? இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா?

ஆடை குறித்து அறிவிப்பு

ஆடை குறித்து அறிவிப்பு

இந்நிலையில் தான் பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் அதன் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமானத்தில் பணியாற்றும் கேபின் பணியாளர்களின் ஆடை அணியும் முறை பற்றி சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் அமீர் பஷீர் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்மறையான பிம்பம்

எதிர்மறையான பிம்பம்

சில கேபின் பணியாளர்கள் உள்நாட்டில் இருநகரங்களுக்கு இடையேயான பயணத்தின்போதும், ஓட்டல்களில் தங்கும் போதும், பிற இடங்களுக்கு செல்லும்போதும் மிகவும் சாதாரணமாக உடை அணிகின்றனர். இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்று ஆடை அணிவது கேபின் ஊழியர்கள் மட்டுமின்றி விமான நிறுவனத்தின் மீதும் பொதுமக்களுக்கு எதிர்மறையான பிம்பத்தை கட்டமைக்கிறது.

உள்ளாடைகள் அணிய...

உள்ளாடைகள் அணிய...

எனவே, கேபின் பணியாளர்கள் முறையான அதோடு சரியான உள்ளாடைகளுக்கு மேல் சாதாரண ஆடைகள் அணிய வேண்டும். ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகள் நமது கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். டிசிபி, எஸ்பி, எல்சிசி மற்றும் குரூமிங் அதிகாரிகள் அனைவரும் கேபின் பணியாளர்களை கண்காணிக்க வேண்டும். இதுபற்றி மெயில் மூலம் புகார் அளிக்க வேண்டும். இதனை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. தற்போது இது பாகிஸ்தானில் விவாதப்பொருளாகி உள்ளது.

அதிகநேரம் பணி

அதிகநேரம் பணி

ஏற்கனவே பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேபின் ஊழியர்கள் ஏற்கனவே சர்வதேசய போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு மூலம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன் சிஇஓ அமீர் ஹயாத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தான் தற்போது புதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan International Airlines has issued an advisory to female and male flight attendants. Wear proper underwear. If not, a warning has been given that action will be taken.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X