For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவுப் பொருள் மொத்த பணவீக்கம் 71 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உணவுப் பொருள் பணவீக்க விகிதம் 71 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. விலைவாசி குறியீட்டு எண் நவம்பர் மாதத்தில் 0.6% உயர்ந்தது.

மாதாந்திர மொத்த விலைக் குறியீட்டை (WPI) அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்கம், ஒரு வருடம் முன்பு இதேகாலகட்டத்தில், (நவம்பர் 2018) 4.47 சதவீதமாக இருந்தது.

WPI inflation rises to 0.58% in November, says data

உணவு பொருட்களுக்கான விலை உயர்வு விகிதம் ஒரு மாதத்திற்கு முந்தைய 9.80 ஆக இருந்த மாதத்தில் 11 சதவீதமாக உயர்ந்தது, அதே நேரத்தில் உணவு அல்லாத பொருட்களின் விலை அக்டோபரில் 2.35 சதவீதத்திலிருந்து இப்போது 1.93 சதவீதமாக குறைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள டேட்டா கூறுகிறது.

உற்பத்தி பொருட்களுக்கான மொத்த பணவீக்கம் மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில் நிலையான (-) 0.84 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் 3 ஆண்டு உயர்வான 5.54 சதவீதமாக உயர்ந்தது. காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தைரியம் இருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷாவை விசிட் அடிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.. சோனியா தைரியம் இருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷாவை விசிட் அடிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.. சோனியா

English summary
Wholesale prices based inflation rose to 0.58 per cent in November, as against 0.16 per cent in October due to increase in prices of food articles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X