For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு 2வது எம்.ஏ. பட்டம்: வாங்க ஆள் இல்லை

By Siva
Google Oneindia Tamil News

நாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு இரண்டாவது எம்.ஏ. பட்டம் அவர் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் கடந்த மாதம் 30ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். சி.ஏ. படித்த யாகூப் சிறையில் இருந்தபடியே இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து கடந்த 2013ம் ஆண்டு பட்டம் வாங்கினார்.

Yakub conferred his 2nd MA degree in ‘absentia’

பல்கலைக்கழக அதிகாரிகள் பட்டத்தை நாக்பூர் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர் எம்.ஏ. அரசியல் அறிவியல் படிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடித்தார். அதற்கான பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் யாகூப் மேமனின் குடும்பத்தார் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து அவரின் பட்டம் தபால் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் என்.பி. சிங் கூறுகையில்,

பி.ஹெச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்கள் டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. மீதமுள்ளவை அந்தந்த பகுதி மையங்களில் வழங்கப்பட்டன என்றார்.

English summary
Mumbai blast accused Yakub Memon who was hanged on july 30th was conferred his second M.A. degree in absentia on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X